Home /News /automobile /

இந்த வருடத்தில் 19 கார்கள், 5 பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ள BMW!

இந்த வருடத்தில் 19 கார்கள், 5 பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ள BMW!

BMW

BMW

இந்த 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நான்கு சக்கர வாகன விற்பனையில் 25 சதவிகிதமும், இரு சக்கர வாகன விற்பனையில் 41 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் கூறுகிறது.

சொகுசு வாகனங்களை தயாரிப்பதற்காக உலகம் முழுவதும் பெயர்போன நிறுவனமான பிஎம்டபுள்யூ (BMW) இந்த 2022ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 19 கார்கள் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிடிஐ-யின் (PTI) சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது. கூடுதலாக பிஎம்டபுள்யூ தனது ஃபுல் எலெக்ட்ரிக் செடான் ஐ4 மாடலை இந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நான்கு சக்கர வாகன விற்பனையில் 25 சதவிகிதமும், இரு சக்கர வாகன விற்பனையில் 41 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் கூறுகிறது. கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், செமி-கண்டெக்டர் பற்றாக்குறை, விநியோகச் சங்கிலியில் சீர்குலைவு போன்ற பல சிக்கல்கள் நிலவிய காலகட்டத்திலும், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் சீனாவில் கோவிட்-19 பணிநிறுத்தம் போன்ற சூழ்நிலைகளிலும் கூட பிஎம்டபுள்யூ-வின் விற்பனை பட்டையை கிளப்பியுள்ளது.

ஜனவரி-மார்ச் 2022 காலகட்டத்தில், பிஎம்டபுள்யூ குழுமம் அதன் சிறந்த விற்பனை செயல்திறன்களில் ஒன்றை பதிவுசெய்தது, நான்கு சக்கர வாகன விற்பனையில் 25.3 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் 2,815 யூனிட்கள் விற்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் செடான்கள் மற்றும் எஸ்யுவி-க்களின் 2,636 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மினி லக்ஸூரி காம்பாக்ட் கார்களின் 179 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும் 1,518 யூனிட்களை விற்பனை செய்து பிஎம்டபுள்யூ மோட்டோர்டு 41.1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

பிஎம்டபிள்யூ குரூப் இந்தியாவின் தலைவர் விக்ரம் பவா, தற்போது சப்ளை கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார், மேலும் "நாங்கள் நான்கு சக்கர வாகனங்களுக்கு சுமார் 2,500 ஆர்டர்களையும், மோட்டார் சைக்கிள்களுக்கு 1,500 ஆர்டர்களையும் ஹோல்ட் செய்து வைத்திருப்பதால், நாங்கள் இன்னும் அதிகமாக விற்பனை செய்திருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் வளர்ச்சி இரட்டிப்பாகியிருக்கலாம்" என்றும் அவர் கூறி உள்ளார்.

also read : ஹோண்டா கார் வாங்க இதுவே சரியான நேரம்.... அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் அடிப்படையில், முழு ஆண்டுக்கான விற்பனை செயல்திறன் எதிர்பார்ப்பை (full-year sales performance expectation) பற்றி பேசுகையில், இந்த ஆண்டு அனைத்து லாஜிஸ்டிக்ஸ் தொடர்பான சவால்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள விநியோக நிலைமைகளை வைத்து பார்க்கும் போது, சூழ்நிலை மாறி வருகிறது, இது நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தீர்மானிக்கும் என்றும் பவா கூறி உள்ளார்.



also read : ‘இந்தியாவிலும் இனி பறக்கும் கார்’... பிரபல ஜப்பான் நிறுவனத்துடன் சுசூகி போட்ட ஒப்பந்தம்!

"எங்களிடம் ஒரு நல்ல ஆர்டர் பைப்லைன் உள்ளது. அதை நிறைவேற்ற முடிந்தால், நிச்சயமாக நாங்கள் ஒரு நல்ல ஆண்டை எதிர்நோக்குகிறோம்" என்றும் அவர் கூறி உள்ளார். சவால்கள் இருந்தபோதிலும், நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் முறையே 25% மற்றும் 41% வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் பவா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தடைகள் குறித்து கூறுகையில், ''எங்களிடம் இருந்த செமி-கண்டெக்டர் பற்றாக்குறை இன்னும் முழுமையாக சமாளிக்கப்படவில்லை. ரஷ்யா-உக்ரைன் போர் அல்லது கோவிட்-19 காரணமாக சீனாவில் தற்போதுள்ள பணிநிறுத்தம் போன்ற காரணங்களால் கப்பல்கள் மற்றும் விமான சரக்குகளின் கிடைக்கும்தன்மையிலும் சவால்கள் உள்ளன" என்றும் பவா கூறி உள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: BMW car

அடுத்த செய்தி