Home /News /automobile /

ஒரு பட்டனை அழுத்தினால் நிறம் மாறும் கார் – பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் புதிய மாடல்

ஒரு பட்டனை அழுத்தினால் நிறம் மாறும் கார் – பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் புதிய மாடல்

BMW iX Flow

BMW iX Flow

BMW iX Flow Car | நிறம் மாறும் கார் என்பதைத் தவிர்த்து, இந்த சொகுசு காரில் பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களும் உள்ளன. உங்கள் காரை பார்க்கிங் லாட்டில் நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நாங்கள் அதை ஃபிளாஷ் செய்ய முடியும்.

விரும்பும் வண்ணத்தில் ஆடைகள் ஆபரங்கள் அணிய முடியும். ஆடையின் வண்ணத்தில் தலை முதல் கால் வரை அலங்கரித்துக் கொள்ள முடியும். ஆனால், அதே போல காரின் வண்ணத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்ள முடியுமா? ஆம் என்கிறது BMW சொகுசு நிறுவனம். BMW கார் என்றாலே, சொகுசு, அதி நவீன வசதிகள், கண்கவரும் வடிவமைப்பு, ஆகியவை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. ஜெர்மானிய சொகுசு கார்களின் உற்பத்தியாளரான BMW நிறுவனம் தனது புதிய, நிறம் மாறும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், காரின் நிறத்தை நீங்கள் விரும்புவது போல மாற்றிக்கொள்ளலாம் என்பதே இதன் சிறப்பம்சம். அதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

CES 2022 வில் தனது புதிய நிறம் மாறும் காரை அறிமுகப்படுத்தியது பிஎம்டபுள்யூ நிறுவனம். இந்த BMW iX Flow காரில் பட்டன் அழுத்தவதன் மூலம் காரின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம். தனித்துவமான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் காரின் நிறம் மாறும் அம்சம் வடிவமைத்து சேர்க்கப்பட்டுள்ளது. “இது வரை யாரும் காணாத அளவுக்கு நாங்கள் தனிப்பயனாக்கத்தைக் கொண்டு வருகிறோம்” என்று பெருமையுடன் தனது புதிய காரை அறிமுகம் செய்தது.

“உங்கள் ஆடையை நீங்கள் தேர்வு செய்து அணியலாம், நீங்கள் விரும்பியதை உங்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்யலாம், அதே போல, உங்கள் காரின் வண்ணத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்” என்று அட்டகாசமாக, அறிமுக நிகழ்ச்சியில் BMW தெரிவித்தது.



காரை விரும்பும் நிறத்தில் எல்லாம் மாற்றிக்கொள்ளும் அம்சம் மட்டுமே ஹைலைட்டாக காணப்படுகிறது. ஆனால், எந்த வகையான டெக்னாலஜி மற்றும் வேறு முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் அதிகமாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த புதிய BMW iX எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள, டிவிட்டரில் BMW ஒரு வீடியோ கிளிப்பை பகிர்ந்துள்ளது. அந்த கிளிப்பில், டார்க் டிரே நிறத்தில் இருந்த BMW iX வாகனம், வெள்ளை நிறத்துக்கு மாறுவதைக் காண முடிகிறது. BMW நிறுவனம் பகிர்ந்த அந்த வீடியோ கிளிப் இங்கே.



நிறம் மாறும் கார் என்பதைத் தவிர்த்து, இந்த சொகுசு காரில் பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களும் உள்ளன. உங்கள் காரை பார்க்கிங் லாட்டில் நீங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நாங்கள் அதை ஃபிளாஷ் செய்ய முடியும். எனவே, எவ்வளவு நெரிசலாக இருந்தாலும் நீங்கள் எளிதாக உங்கள் காரை அடையாளம் காண முடியும்.

Also Read : 

அடுத்ததாக, நிறம் மாற்றும் போது, சூரிய ஒளியின் பிரதிபலிப்பையும் மாற்ற முடியும். இதனால், காரின் தெர்மல் பண்புகளும் மாறும். சுற்றுசூழல் பாதிப்பு இல்லாமல் நீண்ட நாட்களுக்கு பயன்படும் வகையில் காரின் நிறத்தை மாற்ற முடியும் என்ற அம்சமும் இதில் உள்ளது. நிறம் மாறும் காரின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, BMW car

அடுத்த செய்தி