BMW சார்பில் வெளியாக உள்ள முதல் எலெக்ட்ரிக் காரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
ஜெர்மனி கார் உற்பத்தி நிறுவனமான BMW வருகிற 2021-ம் ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் ரக காரை வெளியிட உள்ளது. ‘iNext' என்னும் அந்த எலெக்ட்ரிக் காரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அட்டகாசமான ஸ்டியரிங் அம்சங்களுடன் வெளிவர உள்ள ‘iNext'-ன் ஸ்டியரிங் வீல்-ன் புகைப்படம்தான் ஃபர்ஸ்ட் லுக் ஆக வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்டியரிங் வீலை சட்டென மாற்றும் வசதி அதனுடன் விபத்துகளைக் குறைக்கும் வகையிலான ஆப்ஷன் என அசத்துகிறது iNext ஸ்டியரிங் வீல். ஆட்டோ ட்ரைவிங் ஆப்ஷன் கொண்ட இந்தக் காரில் ஓட்டுநர் ஆட்டோ ஆப்ஷனில் காரை வைத்துவிட்டும் கூட பயணம் செய்ய முடியும்.
iNext ஒரு எஸ்யூவி ரகக் காராகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதே 2021-ம் ஆண்டில் வெளிவர உள்ள ஆடி ஈ-ட்ரான் மற்றும் மெர்சிடிஸ் EQC ஆகிய கார்களும் iNext-க்குப் போட்டியாகவே வரும் எனக் கூறப்படுகிறது.
மேலும் பார்க்க: 100-வது ஆண்டு விழாவில் ‘எலெக்ட்ரிக்’ மாற்றத்தை அறிவித்த பென்ட்லி..! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.