Home /News /automobile /

ஒரு முறை சார்ஜ் போட்டால் 590 கி.மீ வரை ஓடும் BMW i4 இந்தியாவில் அறிமுகம்... விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

ஒரு முறை சார்ஜ் போட்டால் 590 கி.மீ வரை ஓடும் BMW i4 இந்தியாவில் அறிமுகம்... விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

BMW i4

BMW i4

BMW i4-ன் பேட்டரி 50 kW மற்றும் 205 kW ஆகிய இரண்டின் DC ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

  சில மாதங்களுக்கு முன் BMW நிறுவனம் ரூ. 1.16 கோடி விலையில் iX electric SUV-யையும், Mini Cooper SE-ஐ ரூ.47.20 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தி இருந்த நிலையில், சமீபத்தில் BMW i4 எலெக்ட்ரிக் செடான் (BMW i4 electric sedan) காரை அறிமுகப்படுத்தி உள்ளது.

  BMW குரூப் இந்தியாவின் மூன்றாவது எலெக்ட்ரிக் வாகனம் இதுவாகும். BMW தனது i4 எலெக்ட்ரிக் செடானை இந்தியாவில் ரூ. 69.90 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய BMW i4 ஆனது i4 eDrive40 என்ற வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த விலையுயர்ந்த எலெக்ட்ரிக் செடான் மிக நீண்ட தூரம் செல்ல கூடிய எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். ஏனென்றால் இது முறை சார்ஜ் செய்யப்பட்டால் சுமார் 590 கிமீ வரை ஓடும் திறன் கொண்டது. இந்தியாவில் உள்ள மற்ற EVகளுடன் ஒப்பிடும் போது இது மிக நீண்ட தூரமாகும்.

  BMW i4 எலெக்ட்ரிக் செடானுக்கான ஆன்லைன் புக்கிங்ஸ் தொடங்கப்பட்டு உள்ள அதே நேரத்தில் டெலிவரிகள் ஜூலை 2022 தொடக்கத்தில் தொடங்கும். இந்த அறிமுகம் பற்றி பேசிய BMW குரூப் இந்தியா தலைவர் விக்ரம் பவாஹ் "BMW i4 அறிமுகம் மூலம், நாட்டில் முதல் எலெக்ட்ரிக் மிட்-சைஸ் செடானை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

  Also Read : சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்... இனி இந்த மாடல்கள் விற்பனை இல்லை

  BMW eDrive தொழில்நுட்பம், மிகவும் மெலிதான மற்றும் உயர் மின்னழுத்த லித்தியம்-அயன் பேட்டரி, ரியர் வீல் டிரைவ மற்றும் அட்வான்ஸ்டு சஸ்பென்ஷன் கினமேட்டிக்ஸ் ஆகியவற்றின் தனித்துவமான கலவை காரணமாக BMW i4 ஒரு சிறந்த ஸ்போர்ட்டி லுக் மற்றும் பர்ஃபார்மென்ஸை பெறுகிறது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்கள் நீண்ட பயணங்களின் போதும் கூட அதிகபட்ச வசதியை உறுதி செய்கிறது" என்று கூறி உள்ளார்.

  எலெக்ட்ரிக் பவர் ட்ரெயின் & சார்ஜிங்:

  இந்த i4 எலெக்ட்ரிக் கார் CLAR கட்டமைப்பை அடிப்படையாக கொண்டது, மேலும் 83.9 kWh பேட்டரி பேக் ஃப்ளோரில் பொருத்தப்பட்டுள்ளது. இது 340hp மற்றும் 430Nm உற்பத்தி செய்யும் ரியர் ஆக்ஸில்-மவுண்ட்டட் எலெக்ட்ரிக் மோட்டாரைச் செயல்படுத்துகிறது, இது i4 காரை 0 - 100kph ஸ்பீடை வெறும் 5.7 வினாடிகளில் அடையவும் மற்றும்190kph என்ற டாப் ஸ்பீடை அடையவும் அனுமதிக்கிறது. i4 ஆனது ஐந்தாம் தலைமுறை BMW eDrive தொழில்நுட்பத்துடன் வருகிறது.

  எலெக்ட்ரிக் மோட்டார், சிங்கிள்-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் பவர் எலக்ட்ரானிக்ஸ் மூலம் இயக்கப்படும் ஒரு ஒருங்கிணைந்த டிரைவ் யூனிட்டைக் கொண்டுள்ளது. அறிமுக சலுகையாக,BMW நிறுவனம் i4-ஐ 11 கிலோவாட் வால்பாக்ஸ் சார்ஜருடன் இன்ஸ்டாலேஷனையும் வழங்குகிறது. இந்த ஏசி சார்ஜரால் 8.25 மணி நேரத்தில் பேட்டரியை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். i4-ன் பேட்டரி 50 kW மற்றும் 205 kW ஆகிய இரண்டின் DC ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

  முந்தையது 83 நிமிடங்களில் 10 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும், அதே நேரத்தில் வெறும் 18 நிமிடம் சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை செல்லும். 205 kW DC சார்ஜரைப் பொறுத்தவரை, இது 31 நிமிடங்களில் 10 சதவிகிதத்திலிருந்து 80 சதவிகிதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யும், அதே நேரத்தில் வெறும் 10 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 164 கிமீ ரேஞ்சை வழங்கும்.

  எக்ஸ்டீரியர் டிசைன்:

  i4 கார் புதிய தலைமுறை 4 சீரிஸை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் BMW பேட்ஜைச் சுற்றியுள்ள EV கிட்னி கிரில், LED ஹெட்லேம்ப்ஸ்களுடன் ஸ்டைலிங் மாற்றப்பட்டுள்ளது. எனினும் இது 4 சீரிஸின் signature coupe ரூஃப்லைனை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த கார் எல் வடிவ எல்இடி டெயில்லைட்ஸ்களுடன் வருகிறது. மினரல் ஒயிட், பிளாக் சபையர் மற்றும் ஸ்கைஸ்க்ரேப்பர் கிரே ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது.

  இன்டீரியர் டிசைன்:

  BMW i4 எலெக்ட்ரிக் செடான் காரானது கேபின் உள்ளே அதிநவீன டூயல்-ஸ்கிரீன் செட்டப்பை கொண்டு உள்ளது. இதில் ஃப்ரீ-ஃப்ளோயிங் 14.9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் லேட்டஸ்ட் i-Drive 8 யூஸர் சர்ஃபேஸுடன் எம்படட் செய்யப்பட்ட12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே உள்ளிட்டவையும் அடக்கம்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Automobile, BMW car

  அடுத்த செய்தி