Home /News /automobile /

BMW-வின் முதல் முழு எலெக்ட்ரிக் பாதுகாப்பு கார் விற்பனைக்கு வருவது எப்போது?

BMW-வின் முதல் முழு எலெக்ட்ரிக் பாதுகாப்பு கார் விற்பனைக்கு வருவது எப்போது?

BMW முதல் முழு எலெக்ட்ரிக் பாதுகாப்பு கார்

BMW முதல் முழு எலெக்ட்ரிக் பாதுகாப்பு கார்

BMW i4 M50 காரின் சந்தை வெளியீடு இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒருபக்கம் எரிபொருள் விலையேற்றம் மறுபக்கம் கடும் காலநிலை மாற்றம் என உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில்,சுற்றுச்சூழலை காப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்த பல்வேறு உலக நாடுகளின் அரசுகள் மற்றும் நிறுவனங்களால் தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உயர்தர மின்சார வாகனங்களை (top-quality electric vehicles) அறிமுகப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எரிபொருள் மூலம் இயங்கும் வாகன எஞ்சினில் இருந்து மின்சாரத்திற்கு மாறும் நிறுவனங்களின் பட்டியலில் சேர, ஜெர்மன் ஆட்டோமொபைல் நிறுவனமான BMW தனது முதல் முழு மின்சார பாதுகாப்பு கார் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

BMW நிறுவனம் தனது முதல் முழு மின்சார பாதுகாப்பு கார் (Fully-Electric Safety Car) மாடலுக்கு i4 M50 என்று பெயரிட்டுள்ளது. MotoE-ன் இந்த புதிய மின்சார பாதுகாப்பு காரின் (BMW i4 M50) பிரம்மாண்ட வெளியீடு வரும் ஆகஸ்ட் 15 அன்று, ஆஸ்திரியாவின் மோட்டார் சைக்கிள் கிராண்ட் பிரிக்ஸ் (Motorcycle Grand Prix of Austria) நிகழ்வின் போது ஸ்பீல்பெர்க்கில் (Spielberg) உள்ள ரெட் புல் ரிங் சர்கியூட்டில் (Red Bull Ring circuit) அறிமுகம் செய்ய BMW திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த BMW i4 M50 காரின் சந்தை வெளியீடு இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி BMW i4 M50 எலெக்ட்ரிக் கார் பல நவீன அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் வெளியாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த எலெக்ட்ரிக் கார் 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் இயக்கப்படும், மேலும் இது 83.9 kWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்படும். I4 M50 காரின் முன் மற்றும் பின்புற அச்சுகளில் எலெக்ட்ரிக்மோட்டார்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த எலெக்ட்ரிக் காரில் இருக்கும் சக்தி வாய்ந்த எஞ்சின் அதிகபட்சமாக 5536 BHP பவர் மற்றும் , 795 Nm டார்க்கையும் வழங்க கூடியது ஆகும். இந்த மூலம் BMW-வின் i4 M50 எலெக்ட்ரிக் காரானது 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டி விடும். இந்த எலெக்ட்ரிக் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் சுமார் 510 கிமீ தூம் செல்ல முடியும் என்று BMW நிறுவனம் கூறியுள்ளது.

Also read... ஆகஸ்ட் 18-ம் தேதி அறிமுகமாகிறது ஹோண்டா அமேஸ் வாகனம்: ரூ.5000 செலுத்தி முன்பதிவு செய்யலாம்!

தவிர BMW i4 M50 முழு பாதுகாப்பு காரில் MotoGP ஆல் கட்டுப்படுத்தப்படும் அம்சங்கள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் சில முக்கிய அம்சங்களில் ஃப்ளோரசன்ட் கிரீன் கிராபிக்ஸ் கொண்ட மேட் சாம்பல் பெயிண்ட், ரீ டிசைன் செய்யப்பட்ட லைவரி, கிட்னி கிரில்லில் கூடுதல் லைட்கள் உள்ளிட்டவை அடக்கம். கார் டிசைனின் அடிப்படையில் தனித்து நிற்கும் ஒரு விஷயம் ஃப்ரண்ட் ஃபெண்டரில் இடம் பெற்றிருக்கும் " Born Electric in M Town" என்ற சொற்றொடர். அதிக செயல்திறன் சார்ந்ததாக இருப்பதால் BMW பிராண்டின் M சீரிஸ் குறிப்பாக வெற்றிகரமாக உள்ளது, இதன் சில அம்சங்கள் மார்க்கில் இருக்கும் பிற ஆடம்பர கார்களுடன் ஒப்பிடுகையில் தனித்து நிற்கிறது.

BMW M GmbH-ன் தலைமை நிர்வாக அதிகாரியான மார்கஸ் ஃப்ளாஷ் கூறுகையில், " BMW i4 M50 எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளதன் மூலம் நாங்கள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறோம். இந்த முதல் M BEV கார் மூலம் நாங்கள் ஒரு எதிர்காலத்திற்கான போக்கை அமைக்கிறோம். இதன் ஸ்போர்ட்டி லுக், செயல்திறன் மற்றும் மின்மயமாக்கல் ஆகியவை ஒரு அற்புதமான தீமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: BMW car

அடுத்த செய்தி