ஜெர்மனியை சேர்ந்த உலக புகழ் பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனமான BMW, இந்தியாவில் தனது மின்சார வாகன (EV) போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்த சில குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன் நிறுவனம் iX எலெக்ட்ரிக் எஸ்.யூ.வியை ரூ. 1.16 கோடியிலும், மினி கூப்பர் எஸ்.இயை ரூ.47.20 லட்சத்திலும் (எக்ஸ்-ஷோரூம் விலை) அறிமுகப்படுத்திய பிறகு, தற்போது பி.எம்.டபிள்யூ i4 எலெக்ட்ரிக் செடான் (BMW i4 electric sedan) காரை வரும் மே 26 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. BMW ஏற்கனவே டெல்லியில் நடந்த India Art Fair-ல் i4 e-sedan-ஐ காட்சிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே விற்கப்பட்டு வரும் சொகுசு எலெக்ட்ரிக் எஸ்யூவி-க்களின் மத்தியில் i4 தனித்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BMW எலெக்ட்ரிக் செடானை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் கீழே..
BMW i4 எக்ஸ்டீரியர் ஸ்டைலிங்:
BMW i4 ஆனது நிறுவனத்தின் மற்றொரு பிரபல தயாரிப்பான 4 Series Gran Coupe காரை போலவே தோற்றத்தில் சில ஒற்றுமைகளை கொண்டுள்ளது. ஆனால் முன்பக்கத்தில் ஒரு பெரிய கிரில், பெரிய ஏர் டேம்ஸ் மற்றும் புதிய அலாய் வீல்ஸ் உள்ளிட்ட சில எலெக்ட்ரிக் மாடலுக்கான முக்கிய அடையாளத்தை காட்டுகிறது. இந்த BMW i4 EV-யானது 4,783mm நீளம், 1,852mm அகலம் மற்றும் 1,448mm உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 2,856 மிமீ ஆகும்.
இன்டீரியர் கேபின்:
BMW i4 எலெக்ட்ரிக் செடான் காரானது கேபின் உள்ளே அதிநவீன டூயல்-ஸ்கிரீன் செட்டப்பை கொண்டு உள்ளது. இதில் ஃப்ரீ-ஃப்ளோயிங் 14.9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் லேட்டஸ்ட் i-Drive 8 யூஸர் சர்ஃபேஸுடன் எம்படட் செய்யப்பட்ட 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே உள்ளிட்டவையும் அடக்கம்.
BMW i4 பேட்டரி மற்றும் ரேஞ்ச்:
BMW i4 எலெக்ட்ரிக் செடான் கார் அதன் மையத்தில் 83.9kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது மற்றும் பின் வீல்ஸ்களுக்கு பவர் அனுப்புகிறது. இதன் உள்ளே இருக்கும் மோட்டார் 335 பிஎச்பி பவர் மற்றும் 430 என்எம் பீக் டார்க்கை வழங்குகிறது. i4 காரானது பூஜ்ஜியத்திலிருந்து 100 kmph ஸ்பீடை வெறும் 5.7 வினாடிகளில் எட்டிவிடும். BMW India வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளபடி i4-ன் WLTP வரம்பு 520 கிமீ-களாக இருக்கும் என தெரிகிறது.
BMW i4 சார்ஜிங் ஆப்ஷன்கள்:
BMW i4 உடன் வழங்கப்படும் சார்ஜிங் ஆப்ஷன்கள் பற்றிய எந்த தகவலையும் பிராண்ட் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும் எலெக்ட்ரிக் செடானுடன் BMW Wallbox கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது BMW Wallbox மூலம், 83.9 kWh பேட்டரியை 10 முதல் 12 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.
எதிர்பார்க்கப்படும் விலை..
BMW i4 இந்தியாவில் CBU யூனிட்டாக கொண்டு வரப்படுவதால், இந்த எலெக்ட்ரிக் செடானின் விலையை மதிப்பிடுவது சற்று கடினம். இருப்பினும், மினி கூப்பர் SE மற்றும் BMW iX விலையை பார்க்கும் போது, இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 80 லட்சத்திற்கு மேல் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.