• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 120 கி.மீ டாப் ஸ்பீடு.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 130 கி.மீ தூரம் செல்லும் BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

120 கி.மீ டாப் ஸ்பீடு.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 130 கி.மீ தூரம் செல்லும் BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

BMW CE 04 மின்சார ஸ்கூட்டருக்குள் சில சுவாரஸ்யமான அம்சங்களை பேக் செய்துள்ளது BMW நிறுவனம். மிகவும் நவீனமான மற்றும் டீஸன்ட் ரேஞ்ச், வேகத்துடன் BMW CE 04 மின்சார ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • Share this:
பல ஆண்டுகளாகவே ஒரு சிறந்த எலெக்ட்ரிக் சிட்டி ஸ்கூட்டரை தயாரித்து விற்க விரும்புவதாக பி.எம்.டபிள்யூ நிறுவனம் கூறி வருகிறது. இப்போது தனது வாடிக்கையாளர்களுக்காக சிறப்பான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் பி.எம்.டபிள்யூ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஜெர்மன் வாகன உற்பத்தியாளரான பி.எம்.டபிள்யூ தனது மோட்டராட் பிரிவு BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்ய துவங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது BMW உற்பத்திக்கு கொண்டு வந்துள்ளது எலெக்ட்ரிக் சிட்டி ஸ்கூட்டர்கள். எலெக்ட்ரிக் கிக் ஸ்கூட்டர்களுடன் குழப்பமடைய வேண்டாம்.

சிறிது காலமாகவே வளர்ச்சியில் இருந்த BMW CE 04 மின்சார ஸ்கூட்டருக்குள் சில சுவாரஸ்யமான அம்சங்களை பேக் செய்துள்ளது BMW நிறுவனம். மிகவும் நவீனமான மற்றும் டீஸன்ட் ரேஞ்ச், வேகத்துடன் BMW CE 04 மின்சார ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவலை BMW நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஃப்ரேமிங் வரையறுக்கப்பட்ட 81 மைல் ரேஞ்சை கவர் செய்ய உதவுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு சிறிய முன் கவசம், பெரிய சைட் பேனல்கள் மற்றும் ஒரு பெஞ்ச் போன்ற இருக்கை கொண்ட மெலிந்த வால் பிரிவு உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 2 கலர் ஆப்ஷன்களில் வழங்குகிறது BMW நிறுவனம். அதில் ஒரு கலர் வெளிர் வெள்ளை நிறத்தில் மேட் கருப்பு செக்ஷன்களுடன் வருகிறது. Avant Garde Style trim வேரியண்ட் ஒரு மாகெல்லன் கிரே (Magellan Grey) மெட்டாலிக் கலரை கொண்டுள்ளது. இதில் கருப்பு / ஆரஞ்சு சீட் மற்றும் ஆரஞ்சு விண்ட் டிஃப்ளெக்டர் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் பி.எம்.டபிள்யூ ஸ்டோரேஜ் பாக்ஸ்களையும் இணைத்துள்ளது. இந்த ஸ்டோரேஜ் பாக்ஸ்கள் ஸ்கூட்டரின் சைட்கள் மற்றும் முன்பக்கத்தில் அமைந்துள்ளன.

Also Read:   பிகில் படத்தை போட்டுக் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.. சென்னை அரசு மருத்துவமனையில் ருசிகர சம்பவம்

மேலும் இந்த வாகனத்தில் காற்றோட்டமான type-C USB சார்ஜிங் போர்ட்டுடன் கூடிய மொபைல் சார்ஜிங் பாக்ஸ் உள்ளது. BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு நிரந்தர காந்த மோட்டாரை பயன்படுத்துகிறது. எஃகு சட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த மோட்டார் பேட்டரி மற்றும் பின்புற சக்கரத்திற்கு இடையில் உள்ளது. இது 15kW (20hp) என மதிப்பிடப்பட்ட வெளியீடும், அதிகபட்சமாக 31KW வெளியீடும் கொண்டது. இது BMW CE 04 வாகனம் வெறும் 2.6 வினாடிகளில் 0-50 கிமீ வேகத்தை அடையவும், அதிகபட்சமாக 120 கிமீ வேகத்தில் செல்லவும் உதவுகிறது. 6.9 கிலோவாட் பாஸ்ட் சார்ஜிங் மூலம் சுமார் 1 மணி 40 நிமிடங்களில் பூஜ்யத்திலிருந்து 100 சதவீதம் சார்ஜ் ஏறி விடும்.

Also Read:  ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்...

இது நகர மற்றும் நெடுஞ்சாலை பயணங்களை எளிதில் கையாளும் திறன் மின்சார வாகனமாக இதை அடையாளப்படுத்துகிறது. இந்த வாகனத்தின் ஃப்ளோர் போர்டின் உள்ளே 8.9kWh லித்தியம் அயன் பேட்டரி உள்ளது, இது மோட்டருக்கு தேவையான ஆற்றலை தருகிறது. ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 130 கி.மீ தூரம் வரை இந்த BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணிக்கலாம் என்று கூறுகிறது BMW நிறுவனம். இதில் மூன்று நிலையான ரைடிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை சுற்றுச்சூழல், சாலை மற்றும் மழை (Eco, Road and Rain) ஆகிய மோட்கள் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டைனமிக் ட்ரக்ஷன் கன்ட்ரோல் மற்றும் டைனமிக் ரைட் மோட் கூடுதல் விருப்பமாக கிடைக்கிறது. இது இன்டகிரேடட் மேப்ஸ் மற்றும் முழு ஸ்மார்ட் போன் இணைப்பையும் கொண்டுள்ளது. இது நேவிகேஷன் மற்றும் பிற ரைடிங் செயல்பாடுகளுக்கு இடையில் ஒரு ஸ்பிளிட் செயல்பாட்டை (split function) வழங்குகிறது. இன்னும் பல்வேறு நவீன அம்சங்கள் அடங்கிய BMW CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும்  2022-க்குள் சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மார்க்கெட்டை பொருத்த வரை, இந்த எலெக்ட்ரிக் வாகனத்தை இங்கு கொண்டு வருவதற்கான எந்த திட்டத்தையும் இதுவரை BMW நிறுவனம் அறிவிக்கவில்லை, மேலும் அவ்வாறு செய்வதற்கான வாய்ப்புகளும் குறைவு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: