ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

டாக்டர்களுக்காக ஃப்ரீ எஞ்சின் ஆயில் சர்வீஸை அறிவித்துள்ள BMW குரூப் இந்தியா நிறுவனம்!

டாக்டர்களுக்காக ஃப்ரீ எஞ்சின் ஆயில் சர்வீஸை அறிவித்துள்ள BMW குரூப் இந்தியா நிறுவனம்!

மாதிரி படம்

மாதிரி படம்

கோவிட் -19 தொற்று நோயை எதிர்த்துப் போராட தன்னலமின்றி நேரம் காலம் பார்க்காமல் பல மாதங்களாக சரியான ஓய்வின்றி உழைத்து வரும் மருத்துவர்களுக்கென சிறப்பு சலுகைகளை பி.எம்.டபிள்யூ குரூப் இந்தியா (BMW Group India) அறிவித்துள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் பீதி நிலவி வரும் நிலையில் முன்கள பணியாளர்களான மருத்துவர்கள் கடந்த 14 மாதங்களுக்கும் மேலாக ஓய்வின்றி, உயிரை பொருட்படுத்தாமல் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கோவிட் -19 தொற்று நோயை எதிர்த்துப் போராட தன்னலமின்றி நேரம் காலம் பார்க்காமல் பல மாதங்களாக சரியான ஓய்வின்றி உழைத்து வரும் மருத்துவர்களுக்கென சிறப்பு சலுகைகளை பி.எம்.டபிள்யூ குரூப் இந்தியா (BMW Group India) அறிவித்துள்ளது.

இதன்படி பி.எம்.டபிள்யூ / மினி (BMW / MINI) கார் அல்லது பி.எம்.டபிள்யூ மோட்டராட் பைக் (BMW Motorrad bike) வைத்திருக்கும் மருத்துவர்களுக்காக பிரத்யேகமாக சிறப்பு வாடிக்கையாளர் ஆதரவு திட்டத்தை (special customer support initiative) பி.எம்.டபிள்யூ குரூப் இந்தியா அறிவித்துள்ளது. தொற்றுக்கு எதிரான போரில் முன்களத்தில் துணிச்சலுடன் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு நன்றி மற்றும் மரியாதை அளிக்கும் வகையில் பி.எம்.டபிள்யூ குரூப் இந்தியா மற்றும் அதன் டீலர் பார்ட்னர்களுடன் சேர்ந்து, வரும் 2021 ஜூன் 1 முதல், 2021 செப்டம்பர் 30 வரை இலவச எஞ்சின் ஆயில் சர்வீஸை இலவசமாக வழங்க உள்ளது.

இது பற்றி பேசியுள்ள பி.எம்.டபிள்யூ குரூப் இந்தியா தலைவர் விக்ரம் பவா (Vikram Pawah), " கொரோனா பேரிடர் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக, மருத்துவர் சமூகம் ஓய்வின்றி அயராது உழைத்து வருகிறது, உயிருக்கு ஆபத்து இருந்தாலும் எண்ணற்ற தொற்று நோயாளிகளுக்கு மருத்துவ சமூகம் சிகிச்சையளித்து வருகிறது. அயராத முயற்சியின் மூலம் விலைமதிப்பற்ற உயிர்களை மீட்டு காப்பாற்றி வருகின்றனர் மருத்துவர்கள். பி.எம்.டபிள்யூ குரூப் இந்தியாவின் சிறப்பு சேவைக்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, மருத்துவர்களின் பி.எம்.டபிள்யூ, மினி கார்கள் மற்றும் பி.எம்.டபிள்யூ மோட்டராட் பைக்குகளுக்கு ஒரு இலவச எஞ்சின் ஆயில் சர்வீஸை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். தொற்று நீடிக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில் அனைத்து மருத்துவர்களின் குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பு மற்றும் மனிதகுலத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வரும் அவர்களின் சேவையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம் மற்றும் நன்றி கூறுகிறோம்" என்றார்.

Also read... புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் விரைவில் வெளியாகிறது ஹோண்டா பைக், ஸ்கூட்டர்கள்!

இந்திய மருத்துவ சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள், பி.எம்.டபிள்யூ அல்லது வாகனம் வைத்திருக்கும் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் இந்த இலவச சேவையைப் பெறுவதற்காக பதிவு செய்து கொள்ளலாம். BMW Motorrad பைக் வைத்திருக்கும் மருத்துவர்கள் இந்த பிரத்யேக சேவையை பெறுவதற்கான மேலதிக தகவல்களுக்கு தங்களது அருகிலுள்ள பி.எம்.டபிள்யூ மோட்டராட் அங்கீகரிக்கப்பட்ட டீலரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல தற்போதுள்ள பி.எம்.டபிள்யூ அல்லது மினி சர்வீஸை உள்ளடக்கிய பேக்கேஜை ( Existing BMW or MINI Service Inclusive package) வைத்திருப்பவர்கள் இலவச எஞ்சின் ஆயில் சர்வீஸிற்க்கு பதில், இலவச வாகன சுத்திகரிப்பு (free sanitisation of vehicle) அல்லது இலவச கார் கேர் பேக்கேஜ் (complimentary Car Care Package) இவை இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: BMW car