இந்தியாவில் பி.எம்.டபிள்யூ 2-சீரிஸ் கிரான் கூப் (The BMW 2-Series Gran Coupé) கார்கள் புதிய பெட்ரோல் வேரியண்டில் இன்று (ஜன.12) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘எம் ஸ்போர்ட்’ (M Sport) தொகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய பி.எம்.டபிள்யூ 220i சென்னையில் உள்ள பி.எம்.டபிள்யூ குரூப் ஆலையில் தயாரிக்கப்படுகிறது. மேலும் தற்போதுள்ள இரண்டு டீசல் வகைகளுடன் இந்த பெட்ரோல் வாகனமும் கூடுதலாக இன்று முதல் டீலர்ஷிப்பில் கிடைக்கிறது. எக்ஸ்-ஷோரூம் நிலவரப்படி இந்த பிஎம்டபிள்யூ 220i எம் ஸ்போர்ட்டின் (BMW 220i M Sport) அறிமுக விலை ரூ.40,90,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.டபிள்யூ 2 ஜி.சியின் (BMW 2GC) புதிய வேரியண்ட்டில் ட்வின்பவர் டர்போ, இரண்டு லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினில் கிடைக்கிறது. இது 190 ஹெச்பி உற்பத்தியையும், 1350-4600 ஆர்.பி.எம்.-ல் அதிகபட்சமாக 280 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த வாகனத்தால் மணிக்கு 100 கிமீ வேகத்தை வெறும் 7.1 வினாடிகளில் எட்டமுடியும். மேலும் இந்த எயிட் ஸ்பீட் ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், ஷிப்ட் பெடல்ஸ் கொண்ட ஸ்டீயரிங் அம்சத்துடன் வருகிறது. பி.எம்.டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது.
அவை உலோகம் அல்லாத ஆல்பைன் ஒயிட் மற்றும் உலோக வண்ணப்பூச்சுகளுடன் கூடிய பிளாக் சபையர், மெல்போர்ன் ரெட் மற்றும் ஸ்ட்ராம் பே ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும் எம் ஸ்போர்ட் வேரியண்ட் இரண்டு கூடுதல் பிரத்யேக வண்ணங்களில் வருகிறது. அவை மிசானோ ப்ளூ மற்றும் ஸ்னாப்பர் ராக்ஸ் ஆகியவை ஆகும். இதுகுறித்து பி.எம்.டபிள்யூ குரூப் இந்தியாவின் தலைவர் விக்ரம் பாவா கூறுகையில், “ஆடம்பர கார் பிரிவில் வளர்ந்து வரும் ட்ரெண்டுகளுக்கு ஏற்ப பிஎம்டபிள்யூ இந்தியா தனது தயாரிப்பு வரம்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. பி.எம்.டபிள்யூ கார் தனது இயக்கத் தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்வதால் அதனை தேர்வு செய்யும் சக்தியை ஆர்வலர்களுக்கு வழங்குவதாக நாங்கள் நம்புகிறோம்.
மேலும் செயல்திறன் மற்றும் விளையாட்டுத்திறனை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட புதிய பிஎம்டபிள்யூ 220ஐ எம் ஸ்போர்ட்ஸ், மோட்டார் ஸ்போர்ட் ரசிகர்களின் தேவைகளுக்கு ஏற்ப சக்திவாய்ந்த தனித்துவத்தை வழங்குகிறது" எனத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பொறுத்தவரை, பி.எம்.டபிள்யூ ஆறு ஏர்பேக்குகள், கவனிப்பு உதவி, பிரேக் அசிஸ்டுடன் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), டைனமிக் டிராக்ஷன் கன்ட்ரோல் (DDC) மற்றும் எலக்ட்ரானிக் டிஃபெரென்ஷியல் லாக் கண்ட்ரோல் (EDLC) உள்ளிட்ட ஏஆர்பி தொழில்நுட்பம், டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (DSC), கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் (CBC) ஆகியவை அடங்கும்.
மேலும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், சைடு இம்பாக்ட் ப்ரொடெக்சன், எலக்ட்ரானிக் வெஹிக்கள் இம்மொபிலைஸர் மற்றும் கிராஷ் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் மவுண்டிங் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இது தவிர பி.எம்.டபிள்யூ இந்திய நிதி சேவைகள் 2-சீரிஸ் கிரான் கூப் எம் ஸ்போர்ட்டுக்கு தனிப்பயனாக்கக் கூடிய மற்றும் நெகிழ்வான நிதி தீர்வுகளை வழங்குகிறது. அதாவது டியூரேசன் மற்றும் மைலேஜ் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பல்வேறு சேவை திட்டங்களை தேர்வு செய்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த பேக்கேஜ் நிபந்தனை அடிப்படையிலான சேவை (CBS) மற்றும் பராமரிப்பு பணிகளை 3 ஆண்டுகள்-40,000 கிமீ முதல் 10 ஆண்டுகள்-2,00,000 கிமீ வரையிலான திட்டங்களுடன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.