ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

புதிய Splendor Plus XTEC-ன் விலை மற்றும் அசத்தலான 5 அம்சங்கள்..! 

புதிய Splendor Plus XTEC-ன் விலை மற்றும் அசத்தலான 5 அம்சங்கள்..! 

ஸ்ப்ளெண்டர் பைக்

ஸ்ப்ளெண்டர் பைக்

Splendor Plus XTEC | சமீபத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் புதிய வேரியன்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் 100சிசி பிரிவில் மிக பிரபலமான மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக இருந்து வருவது ஹீரோ ஸ்பிளெண்டர். சமீபத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் புதிய வேரியன்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது.

தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்பிளெண்டர் பிளஸ்ஸின் புதிய வேரியன்ட் Splendor Plus XTEC ஆகும். Hero MotoCorp நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய Splendor+ XTEC பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.72,900-ஆக உள்ளது. இந்த புதிய பைக்கிற்கு ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் 5 வருடங்கள் வாரன்டி வழங்குகிறது. மேலும் இந்த புதிய Splendor Plus XTEC பைக்கில் பொதுவாக 100cc-க்கு கீழ் உள்ள பைக்குகளில் வழங்கப்படாத பல அம்சங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

இந்த பைக் பல புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது. சுவாரஸ்யமாக, Pleasure XTEC ஸ்கூட்டரில் முன் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து முக்கிய அப்டேட்களையும் இந்த பைக் பெற்றுள்ளது. கேன்வாஸ் பிளாக், ஸ்பார்க்ளிங் பீட்டா ப்ளூ, பேர்ல் ஒயிட் மற்றும் டொர்னாடோ கிரே உள்ளிட்ட நான்கு புதிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

தற்போது புதிய Splendor Plus XTEC பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் கூலான 5 புதிய அம்சங்கள் பற்றி பார்க்கலாம்...

ப்ளூடூத்:

இந்த புதிய Splendor+ XTEC பைக்கானது ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய ஃபர்ஸ்ட்- ஃபுல் டிஜிட்டல் மீட்டருடன் வருகிறது. இந்த டிஜிட்டல் டிஸ்ப்ளே இன்கம்மிங் மற்றும் மிஸ்டு கால் அலெர்ட்ஸ், ரியல்-டைம் ஃப்யூயல் எஃபிசியன்சி இண்டிகேட்டர், டூ ட்ரிப் மீட்டர்ஸ், லோ ஃப்யூயல் எஃபிசியன்சி இண்டிகேட்டர், நியூ மெசேஜ் அலெர்ட்ஸ், ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டருடன் 2 ட்ரிப் மீட்டர் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.

USB சார்ஜிங்:

ஸ்கூட்டர்களில் இந்த அம்சம் மிகவும் பொதுவானது என்றாலும், இது இன்னும் பல பைக்குகளில் கொடுக்கப்படவில்லை. இந்த அம்சம் Splendor+ XTEC-ஐ மற்ற பைக்குகளை விட சிறப்பானதாக ஆக்குகிறது. பைக்கில் வழங்கப்பட்டுள்ள USB போர்ட் மூலம் ரைடர்கள் பயணத்தின் போதும் தங்கள் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யலாம்.

LED லைட்டிங்:

இந்த புதிய Splendor பைக்கானது LED ஹை-இன்டென்சிட்டி பொசிஷன் லேம்ப் (HIPL) மற்றும் பிரத்யேக கிராபிக்ஸ் உடன் வருகிறது. முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் LED ஸ்ட்ரிப் பைக்கின் லுக்கை மேம்படுத்துகிறது. இவை புதிய Splendor-ஐ ஸ்போர்ட்டியர் பைக்காக மாற்ற உதவுகின்றன.

Also see... ஹரியானா அரசுடன் வாகன முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாருதி

i3S டெக்னலாஜி:

இதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஹீரோவின் i3s ஆட்டோ ஸ்டார்ட் / ஸ்டாப் டெக்னலாஜி, பவர்டிரெய்னில் இருந்து சிறந்த எரிபொருள் சிக்கனத்தை பெற வாடிகையாளர்களுக்கு உதவும்.

பவர்டிரெய்ன்:

புதிய ஸ்பிளெண்டரில் 97.2சிசி பிஎஸ்-VI சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. மேலும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த எஞ்சின் 7,000 rpm-ல் 7.9 பிஎஸ் ஆற்றலையும், 6,000rpm-ல் 8.05Nm பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது.

First published:

Tags: Automobile, Bike