ஜூன், 2021 முதல் BIS சான்றிதழ் இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்திய தர நிர்ணய பணியகத்திலிருந்து (Bureau of Indian Standards) சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட் மட்டுமே நாட்டில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய அறிவிப்பின் படி, BIS மற்றும் ISI சான்றிதழை பெற்ற இரு சக்கர வாகன ஹெல்மெட் மட்டுமே நாட்டில் விற்க அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். குறைந்த தரம் வாய்ந்த இரு சக்கர வாகன ஹெல்மெட் விற்பனையை முற்றுப்புள்ளி வைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
நாட்டில் இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. நடப்பாண்டு செப்டம்பர் வரையில் இருசக்கர வாகன விபத்து காரணமாக 800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்திலும், இருசக்கர வாகன விபத்து நடைபெற்றுள்ளது வேதனையடைய செய்துள்ளது. பலர் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு காரணமாக தரமற்ற ஹெல்மெட் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2018ல் நடைமுறைக்கு வந்த முந்தைய அறிவிப்பை தற்போது மாற்றியமைத்து, ஹெல்மட்டின் எடை 1.2 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று புதிய பாதுகாப்பு விதிமுறையில் தெரிவித்துள்ளனர். இதனால் இறக்குமதி செய்யப்பட்ட புல்-பேஸ் ஹெல்மெட் இந்தியாவில் விற்க அனுமதிக்கப்படாது. திருத்தப்பட்ட விதிமுறைகள் இறக்குமதி செய்யப்பட்ட ஹெல்மெட் ISI மற்றும் BIS சான்றிதழ் அளவுகோல்களுக்கு இணங்கினால் அவற்றை விற்பனை செய்ய அனுமதிக்கின்றன.
உயர்தர இறக்குமதி செய்யப்பட்ட ஹெல்மெட் பெரும்பாலானவை DOT மற்றும் ECE போன்ற பல சர்வதேச தரங்களுடன் இணங்குகின்றன, அவற்றையும் இந்தியாவில் விற்பனை செய்யலாம். இதுதொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம், 2016ம் ஆண்டு ஹெல்மெட் குறித்து ஆய்வு செய்யவும், குறைந்த எடையிலும், பாதுகாப்பு மிகுதியாகவும் இருக்கும் வகையில் ஹெல்மெட் தயாரிப்பது குறித்து கமிட்டி அமைக்க உத்தரவிட்டது.
Also read... வோடபோன்-ஐடியாவின் ரூ.1,197க்கான ப்ரீபெய்ட் பிளான் - அட்டகாசமான அறிவிப்பு!
அதையடுத்து AIIMS வல்லுநர்கள் மற்றும் BIS இன் நிபுணர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த குழுவில் சேர்க்கப்பட்டனர், கமிட்டியும் தனது ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது. அதை மத்திய அரசும் ஏற்பட்டுக்கொண்டது. BIS இன் திருத்தப்பட்ட விவரக்குறிப்புகளுடன் இந்தியாவில் ஹெல்மெட் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையுடன், நாட்டில் இலகுவான மற்றும் தரமான இரு சக்கர ஹெல்மெட் தயாரிக்க ஒரு நல்ல போட்டி இருக்கும் என்று குழு கருதுகிறது.
நவம்பர் 26, 2020 தேதியிட்ட புதிய அறிவிப்பின் படி, இருசக்கர வாகன ஹெல்மெட் 'BIS விதிமுறைகளின் அட்டவணை -2 இன் திட்டம் -1 இன் படி இந்திய தர நிர்ணய பணியகத்தின் உரிமத்தின் கீழ் இந்திய தரநிலை அடையாளத்தை கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும் இது ஜூன் 1, 2021 முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும்' என்று கூறியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Helmet