• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 4,600 கோடி ரூபாய்க்கு சொகுசு படகு வாங்கியுள்ள பில் கேட்ஸ்... கிறுகிறுக்க வைக்கும் வசதிகள்!

4,600 கோடி ரூபாய்க்கு சொகுசு படகு வாங்கியுள்ள பில் கேட்ஸ்... கிறுகிறுக்க வைக்கும் வசதிகள்!

பில் கேட்ஸ் சொகுசு படகு (Image: The Guardian)

பில் கேட்ஸ் சொகுசு படகு (Image: The Guardian)

ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் வாடகைக்கு சொகுசுப் படகை எடுத்து மகிழ்பவர் இம்முறை சொந்தமாக ஒரு சொகுசுப் படகையே வாங்கியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மைக்ரோசாஃப்ட் துணை நிறுவனரும் உலகின் இரண்டாம் பெரிய பணக்காரருமான பில் கேட்ஸ் தனக்கென பிரத்யேகமாக லிக்விட் ஹைட்ரஜனில் இயங்கும் சொகுசு படகு ஒன்றை வாங்கியுள்ளார்.

    4,600 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தப் படகுதான் உலகில் முதன்முறையாக லிக்விட் ஹைட்ரஜனை திறனாகக் கொண்டு இயங்கும் படகாகும். விடுமுறையைக் கோலாகலமாகக் கொண்டாடும் வழக்கமுடையவர் பில் கேட்ஸ். ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் வாடகைக்கு சொகுசுப் படகை எடுத்து மகிழ்பவர் இம்முறை சொந்தமாக ஒரு சொகுசுப் படகையே வாங்கியுள்ளார்.

    இந்த சொகுசு படகு 370 அடி நீளமுடையது. ஐந்து அடுக்குகள் கொண்ட இந்த படகில் 31 பணியாளர்கள் பணியாற்றுவர். சுமார் 14 விருந்தினர்கள் தங்கலாம். யோகா அறை, ஜிம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் நிலையம், நீச்சல் குளம் என அனைத்து வசதிகளும் கொண்டுள்ளது இந்தப் படகு.

    மேலும் பார்க்க: விமான நிலையத்தை ஆக்கிரமித்த குரங்குகள்... கரடி வேடமிட்டு பணியாற்றும் ஊழியர்கள்!- வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: