1.39 லட்சம் ரூபாயில் இந்தியாவில் இறங்கியது யமஹாவின் YZF-R15 V3.0!

150சிசி ரகங்களில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட முதல் பைக் ஆக YZF-R15 V3.0 இருக்கிறது.

Web Desk | news18
Updated: January 10, 2019, 2:30 PM IST
1.39 லட்சம் ரூபாயில் இந்தியாவில் இறங்கியது யமஹாவின் YZF-R15 V3.0!
யமஹா
Web Desk | news18
Updated: January 10, 2019, 2:30 PM IST
உச்சபட்ச பாதுகாப்பு அம்சத்துடன் 2019-ல் அறிமுகம் ஆகியுள்ளது யமஹாவின் YZF-R15 V3.0.

ஏபிஎஸ் பொருத்தப்பட்ட 12 ஆயிரம் ரூபாய் விலை ஏற்றத்துடன் 1.39 லட்சம் ரூபாய்க்கு யமஹாவின் புதிய YZF-R15 V3.0 விற்பனைக்கு உள்ளது. மூன்றாம் தலைமுறை பைக் ஆக வெற்றிகரமாக R15 சீரிஸ் வரையில் வெளியிட்டுள்ளது யமஹா.

2018-ம் ஆண்டு இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட YZF-R15 தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவின் புதிய மோட்டார் வாகனப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப புதிய யமஹா R15 உள்ளது. 150சிசி ரகங்களில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட முதல் பைக் ஆக YZF-R15 V3.0 இருக்கிறது.

புது விவிஏ டெக்னாலஜி, அசிஸ்ட், Slipper clutch, எல்இடி முகவிளக்கு என அனைத்தும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 155சிசி, ஒரு சிலிண்டர் என்ஜின் என உள்ள YZF-R15 V3.0 பைக்கின் டார்க் வெளியீடு 14.7 Nm ஆக உள்ளது.

6 பாக்ஸ் கியர் இப்புதிய யமஹாவின் சிறப்பாக உள்ளது. Darknight, Thunder Grey மற்றும் Racing Blue என மூன்று நிறங்களில் பைக் வெளிவந்துள்ளது.

மேலும் பார்க்க: மத்திய அரசுக்கு எதிராகப் போராடவுள்ளேன்! ராஜினாமா செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி
First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...