ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கி. மீ. பயணம்... சியோமியின் இ-பைக் பற்றி தெரியுமா...?

ரெட், கிரே மற்றும் வெள்ளை நிறத்தில் சியோமியின் எலக்ட்ரிக் பைக் Himo T1 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கி. மீ. பயணம்... சியோமியின் இ-பைக் பற்றி தெரியுமா...?
சியோமி இ-பைக்
  • News18
  • Last Updated: April 27, 2019, 1:28 PM IST
  • Share this:
ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான சியோமி புதிய எலக்ட்ரிக் பைக் ஒன்றை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் பயன்படுத்தும் பழைய மொபெட் பைக் போன்றே தோற்றம் அளிக்கும் சியோமியின் எலக்ட்ரிக் பைக்கிற்கு Himo T1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

சீனாவில் இந்த எலக்ட்ரிக் பைக் விலை 2,999 யுவான் என முடிவு செய்துள்ளனர். இந்தியா ரூபாயில் அதன் மதிப்பு 31,000 ரூபாயாக இருக்கும்


சியோமியின் எலக்ட்ரிக் பைக் Himo T1-ல் 14,000mAh திறன் கொண்ட லி-அயன் பேட்டரி உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.

Himo T1-ல் முன் பக்கம் ஹைட்ராலிக் பிரேக்கும், பின் பக்கம் டிரம் பிரக்கும் உள்ளது. பைக்கின் எடை 53 கிலோ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ரெட், கிரே மற்றும் வெள்ளை நிறத்தில் சியோமியின் எலக்ட்ரிக் பைக் Himo T1 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியச் சந்தைக்கு இந்த பைக் எப்போது வரும். அதன் விலை என்னவாக இருக்கும் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.மேலும் பார்க்க:
First published: April 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்