டாப் கியரில் பறக்கும் இரு சக்கர வாகன விற்பனை!

இரு சக்கர வாகன விற்பனை வளர்ச்சி சராசரியாக ஆண்டுதோறும் 11.1% அதிகரித்தே வருகிறது என்கிறது ICRA அறிக்கை.

Web Desk | news18
Updated: December 28, 2018, 12:28 PM IST
டாப் கியரில் பறக்கும் இரு சக்கர வாகன விற்பனை!
Bikes (Representative image)
Web Desk | news18
Updated: December 28, 2018, 12:28 PM IST
ஆண்டுதோறும் இந்தியாவில் அதிகரித்து வரும் இரு சக்கர வாகன விற்பனை வரும் நிதி ஆண்டு 8-10 சதவிகித வளர்ச்சி அடையும் என ICRA அறிக்கை தெரிவித்துள்ளது.

ICRA என்னும் ரேட்டிங் தர நிர்ணய அமைப்பு இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சி, தனி நபர் வருமானம், மாநிலங்கள் அளிக்கும் மானியம், வளர்ச்சித் திட்டங்கள் என பல அம்சங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது. அதில், வரும் நிதியாண்டு இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனை 8-10% வளர்ச்சி அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனை 11.1% வளர்ச்சியை சராசரியாகவே கொண்டுள்ளது.

கிராமப்புறம் அதிகரித்திருக்கும் தனி நபர் வருமானமும் மோட்டார் பைக்குகளுக்கான தேவையை அதிகரித்திருப்பதாக ICRA அறிக்கை கூறுகிறது. மேலும், ICRA அறிக்கையில், “நகரமயமாக்கல், மக்கள் மத்தியில் அதிகரித்த செலவிடும் திறன் ஆகியவையும் விற்பனை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால், இரு சக்கர வாகன பராமரிப்பு, அதிகரித்த இன்சூரன்ஸ் கட்டணம், அதிகரித்த வட்டி விகிதம் என சில சேதாரங்களும் உள்ளன.

நடுத்தர மக்களின் தேவை, பணிக்குச் செல்லும் பெண்கள், நகரமயமாக்கல் ஆகியவை அதிகரித்திருப்பது செலவுகளையும் தாண்டி இரு சக்கர வாகன விற்பனையை அதிகரித்துள்ளது.

மேலும் பார்க்க: அதிமுகவை பிரித்தும் சேர்த்தும் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்- மு.க.ஸ்டாலின்
First published: December 28, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...