சீறிப்பாயத் தயாரானது Tiger Trails Thar Desert II...!

இப்புதிய பைக்கை ஜனவரி 15-ம் தேதிக்கு முன்னர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை Triumph மோட்டார்சைக்கிள் நிறுவனம் வழங்குகிறது.

Web Desk | news18
Updated: January 6, 2019, 12:52 PM IST
சீறிப்பாயத் தயாரானது Tiger Trails Thar Desert II...!
representative Image. (Image: Triumph Motorcycles)
Web Desk | news18
Updated: January 6, 2019, 12:52 PM IST
Triumph மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது Tiger Trails Thar Desert பைக்கின் இரண்டாம் பதிப்பை அறிமுகப்படுத்த உள்ளது.

பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் தனது பிரத்யேக Tiger Trails Thar Desert பைக்கின் இரண்டாம் பதிப்பை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவே அறிமுகம் செய்ய உள்ளது.

Triumph Tiger மற்றும் Scrambler பைக்குகளின் வாடிக்கையாளர்கள் ஜெய்பூரில் நடக்கும் நிறுவனத்தின் சிறப்பு பயிற்சி முகாமில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தரப்பிலான ரைடர்களும் இந்த முகாம்களில் கலந்துகொள்ளலாம். பைக் ரேஸ் மற்றும் அட்வென்சர் ரைடு பயிற்சியாளர் விஜய் பர்மார் முகாம் பயிற்சியாளர்காக இருப்பார். பைக் ஓட்டும் கலையில் ரகங்கள் குறித்து இம்முகாமில் வாடிக்கையாளர்கள் கற்றுக்கொள்ள முடியும்.

இப்புதிய பைக்கை ஜனவரி 15-ம் தேதிக்கு முன்னர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை Triumph மோட்டார் சைக்கிள் நிறுவனம் வழங்குகிறது.

ஜெய்பூர் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புவர்கள் 35 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். ஜனவரி 15-ம் தேதிக்குப் பின்னர் ஐந்து நாள் முகமாக நடைபெறுகிறது.

14 பேர் மட்டுமே இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ள முடியும். உணவு, இருப்பிடம், பயிற்சி, பாதுகாப்பு உபகரணங்கள் என அனைத்தும் சேர்த்து ஐந்து நாள்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Loading...
மேலும் பார்க்க: ரோபோ, ட்ரோன் என நவீன தொழில்நுட்பத்தில் கலக்கும் மாணவர்கள்
First published: January 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...