ரூ.3.49 லட்சம் விலையில் BMW பைக்... தெறிக்கவிடும் கங்குலி..!

BMW G 310 R பைக் கடந்த ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் அறிமுகமான போது அந்த பைக்கை வாங்கிய முதல் இந்தியராக இருந்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.

Web Desk | news18
Updated: February 8, 2019, 11:57 AM IST
ரூ.3.49 லட்சம் விலையில் BMW பைக்... தெறிக்கவிடும் கங்குலி..!
கங்குலி
Web Desk | news18
Updated: February 8, 2019, 11:57 AM IST
புதிய BMW G 310 GS மோட்டார் பைக்கை 3.49 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி.

BMW G 310 R பைக் கடந்த ஆண்டு முதன்முதலாக இந்தியாவில் அறிமுகமான போது அந்த பைக்கை வாங்கிய முதல் இந்தியராக இருந்தார் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். BMW பைக்கை இந்தியாவில் யுவராஜ் சிங்கைத் தொடர்ந்து சவுரவ் கங்குலியும் தற்போது வாங்கி அசத்தியுள்ளார். டிவிஎஸ் மோட்டார்ஸ் உடன் இணைந்து கடந்த ஆண்டுதான் முதன்முறையாக இந்திய பைக்குகள் உலகில் BMW கால் பதித்தது.

டிவிஎஸ் உடன் இணைந்து தமிழகத்தின் ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில்தான் BMW பைக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அன்லிமிடெட் கி.மீ-க்கான 3 ஆண்டுகள் வரையிலான வாரண்டியை BMW வழங்குகிறது. BMW G 310 R and BMW G 310 GS ஆகிய இரு பைக்குகளும் 313cc, லிக்விட்-கூல், DOHC சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளன. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட இந்த இரு பைக்குகளும் 34hp திறன் வெளியீடு மற்றும் 28 Nm டார்க் வெளியீடு கொண்டுள்ளது.


இதேபோல் வாகனப் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்த வரையில் இரு பைக்குகளிலும் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூபுலர் ஸ்டீல் ஃப்ரேம் உடன் 5 ஸ்போக் அலாய் சக்கரங்கள் கூடுதல் பலம் அளிக்கின்றன. ஸ்டைல் HP, காஸ்மிக் ப்ளாக் மற்றும் ரேஸிங் ரெட் ஆகிய மூன்று நிறங்களில் BMW பைக்குகள் விற்பனைக்கு உள்ளன. BMW பைக்குகள் ஜெர்மனி, தாய்லாந்து மற்றும் பிரேசிலுக்கு அடுத்து இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் பார்க்க: திமுக, அதிமுக இரண்டுமே அகற்றப்பட வேண்டிய ஊழல் கட்சிகள்-கமல்ஹாசன்
First published: February 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...