ஒரு BS 4 பைக் கூட மிச்சமில்லாமல் விற்றுவிட்டோம்- கொண்டாடும் ராயல் என்ஃபீல்டு

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி  BS 4 ரக வாகனங்களை வாங்கவோ விற்கவோ முடியாது.

ஒரு BS 4 பைக் கூட மிச்சமில்லாமல் விற்றுவிட்டோம்- கொண்டாடும் ராயல் என்ஃபீல்டு
புதிய மோட்டார் சைக்கிள் வாங்குவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை இலவசமாக வழங்கப்படும் என்றும் ராயல் என்பீல்ட் அறிவித்துள்ளது.
  • News18
  • Last Updated: March 20, 2020, 6:59 PM IST
  • Share this:
ஒரு BS 4 ரக பைக் கூட மிச்சமில்லாமல் மார்ச் 31-ம் தேதிக்குள்ளாகவே விற்றுத் தீர்த்துவிட்டோம் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி  BS 4 ரக வாகனங்களை வாங்கவோ விற்கவோ முடியாது. இந்த சூழலில் பல வாகன உற்பத்தி நிறுவனங்களும் ஆயிரக்கணக்கில் வாகனங்களை உற்பத்தி செய்துவிட்டு தற்போது விற்க முடியாத சூழலால் குப்பைக்கும் அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், சரியாகத் திட்டமிட்டு பணியாற்றதன் மூலமாக தங்களிடம் ஒரு BS 4 ரக பைக் கூட மிச்சம் இல்லை என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் பெருமை தெரிவித்துள்ளது. மேலும், முறையான திட்டமிடல், இடைவிடாத உழைப்பின் மூலம் BS 6 ரக பைக்குகளை ஏப்ரல் 1-ம் தேதி முதல் விற்கத் தயாராகி உள்ளதாகவும் அறிவித்துள்ளது.


மேலும் பார்க்க: குப்பைக்குப் போகும் புத்தம்புது கார்கள்..? ஏப்ரல் 1-ம் தேதி முதல் BS-VI கார்கள் மட்டுமே!
First published: March 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading