ஒரே மாதத்தில் சுமார் 70ஆயிரம் பைக்குகளை விற்ற ராயல் என்ஃபீல்டு!

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ராயல் என்ஃபீல்டின் சர்வதேச விற்பனை 1,673 ஆக இருந்துள்ளது.

Web Desk | news18
Updated: February 4, 2019, 5:34 PM IST
ஒரே மாதத்தில் சுமார் 70ஆயிரம் பைக்குகளை விற்ற ராயல் என்ஃபீல்டு!
ராயல் என்ஃபீல்டு (மாதிரிப்படம்)
Web Desk | news18
Updated: February 4, 2019, 5:34 PM IST
ஜனவரி மாதத்தில் மட்டும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 72,701 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக் நிறுவனம் தனது விற்பனையில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் உள்ளூர் சந்தைகளில் 70,872 பைக்குகள் விற்பனை ஆகியுள்ளன. ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் உள்ளூர் விற்பனை 76,205 பைக்குகளாக இருந்துள்ளன.

ஆனால், சர்வதேச விற்பனையில் ராயல் என்ஃபீல்டு விற்பனை அதிகரித்தே காணப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ராயல் என்ஃபீல்டின் சர்வதேச விற்பனை 1,673 ஆக இருந்துள்ளது. இதுவே இந்த ஆண்டு ஜனவரியில் விற்பனை எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்துள்ளது.


விற்பனை விகிதாச்சாரம் அடிப்படையில் ஏப்ரல் 2018 முதல் ஜனவரி 2019 வரையில் ராயல் என்ஃபீல்டின் ஒட்டுமொத்த விற்பனை 5 சதவிதம் உயர்ந்துள்ளது. உள்ளூர் விற்பனை 5 சதவிகிதமும், சர்வதேச விற்பனை 1 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. சர்வதேச ராயல் என்ஃபீல்டு விற்பனையை அதிகரிக்க புதிதாக 650 டிவின்ஸ் ரகங்களைக் களம் இறக்கத் தயாராகி வருகிறது இந்நிறுவனம்.

மேலும் பார்க்க: எம்.ஜி.ஆரின் திண்டுக்கல் திருப்புமுனை!
First published: February 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...