இரண்டு பைக்குகளுக்கு ‘குட்பை’ சொல்கிறது ராயல் என்ஃபீல்டு!

சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு BS-VI க்ளாசிக் 350 ரக பைக்குகளை 1.65 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்குக் கொண்டு வந்தது.

இரண்டு பைக்குகளுக்கு ‘குட்பை’ சொல்கிறது ராயல் என்ஃபீல்டு!
ராயல் என்ஃபீல்டு
  • News18
  • Last Updated: January 14, 2020, 7:02 PM IST
  • Share this:
புல்லட் 500 மற்றும் தண்டர்பேர்டு 500 ஆகிய இரண்டு பைக்குகளின் இந்திய விற்பனையை நிறுத்துவதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

புல்லட் 500 மற்றும் தண்டர்பேர்டு 500 ஆகிய இரண்டு பைக்குகளுக்கும் இந்தியாவில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதிகப்படியாக 500 சீரிஸ் மாடல்களில் க்ளாசிக் 500 மட்டுமே அதீத விற்பனையைப் பெற்று வருகிறது. இதன் காரணமாகவே புல்லட் 500 மற்றும் தண்டர்பேர்டு 500 பைக்குகளின் விற்பனையை ராயல் என்ஃபீல்டு நிறுத்துகிறது.

ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளில் 350cc பைக்குகளுக்கான ஆதரவு அமோகமாக உள்ளது. இதைத் தவிர 650 cc ரக பைக்குகளும் நல்ல விற்பனையைக் கண்டு வருகின்றன. சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு BS-VI க்ளாசிக் 350 ரக பைக்குகளை 1.65 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்குக் கொண்டு வந்தது. ஆனால், தமிழகத்தில் இன்னும் இந்தப் புதிய ரகத்துக்கான முன்பதிவு தொடங்கப்படவில்லை.


அடுத்தடுத்தாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் BS-VI ஹிமாலயன், தண்டர்பேர்டு 350 மற்றும் சில புதிய அறிமுகங்களும் வர உள்ளன. BS-VI விதிமுறைகள் கட்டாயமக்கப்பட்டுள்ள சூழலில் புல்லட் 500 மற்றும் தண்டர்பேர்டு 500 ஆகிய இரண்டு பைக்குகளையும் நிறுத்திய முடிவு சரியானதுதான் என்று வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: மணிக்கு 83 கி.மீ வேகம்... சோதனையில் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 எலெக்ட்ரிக் பைக்!
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading