’நச்’ தோற்றத்தில் Royal Enfield Classic 350 Redditch

6 ஆயிரம் ரூபாய் விலையேற்றத்துடன் 1.52 லட்சம் ரூபாயில் விற்பனைக்கு வந்துள்ளது Royal Enfield Classic 350 Redditch.

Web Desk | news18
Updated: December 28, 2018, 1:08 PM IST
’நச்’ தோற்றத்தில் Royal Enfield Classic 350 Redditch
Royal Enfield Classic 350 Redditch
Web Desk | news18
Updated: December 28, 2018, 1:08 PM IST
இந்தியாவில் Royal Enfield Classic 350 Redditch பைக்  1.52 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவில் அடிப்படையில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய பைக்குகள் அனைத்தும் ABS அல்லது CBS எனும் பிரேக் பாதுகாப்புக் கருவி பொருத்தப்பட்டே வெளியாக வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே Royal Enfield Classic 350 Redditch வெளியிடப்பட்டுள்ளது. 6 ஆயிரம் ரூபாய் விலையேற்றத்துடன் 1.47 லட்சம் ரூபாயிலிருந்து 1.52 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டின் க்ளாசிக் 350 ரக பைக்குகள் மூன்று Redditch வகைகளாக வெளியாகி உள்ளது. சிவப்பு, பச்சை மற்றும் நீலம் என மூன்று நிறங்களில் Redditch உள்ளது. ஐரோப்பியாவைப் பூர்வமிகமாகக் கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் 1950-ம் ஆண்டு கால நிற வடிவமைப்பை தற்போது அறிமுகமாகியுள்ள Redditch சீரிஸில் RE வெளிப்படுத்தி உள்ளது. ஐக்கிய நாடுகளில் உள்ள ரெட்டிச் என்ற நகரில் இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ராயல் என்ஃபீல்டின் உற்பத்தித் தொழிற்சாலை இருந்துள்ளது. அன்றைய கால பிரிட்டிஷ் வடிவமைப்பு உடன் எளிமையான க்ளாசிக் டச் இப்புதிய 350 ரெட்டிச்-க்கு கொடுக்கப்பட்டுள்ளது.

350cc என்ஜின், முன் மற்றும் பின் பக்க மட்கார்டுகள், பெட்ரோல் டேங்க், பைக் விளக்குகள், இருக்கைகள் என அனைத்துமே இரண்டாம் உலகப் போர் சமயம் பிரிட்டிஷ் மோட்டார் சைக்கிள்ஸ் மாடலை அடிப்படையாகக் கொண்டு புதிய Royal Enfield Classic 350 Redditch வடிவம் பெற்றுள்ளது. ரெட்டிச் தொழிற்சாலையில் 1967-ம் ஆண்டுடன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆனால், இந்த ரெட்டிச் என்ற பெயரே க்ளாசிக் பிராண்ட் என்கிறது RE.

மேலும் பார்க்க: கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம்... 9 பேர் கொண்ட குழு சிகிச்சை
First published: December 28, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...