பட்ஜெட் விலையில் புதிய மாற்றங்களுடன் புதிய பஜாஜ் CT110..!

பஜாஜ் ஆட்டோ சார்பில் கிக் ஸ்டார்ட் ரக CT110 பைக் 37,997 ரூபாய்க்கும் எலெக்ஸ்ரீக் ஸ்டார்ட் ரக பைக் 44,480 ரூபாய்க்கும் விற்பனைக்கு உள்ளது.

Web Desk | news18
Updated: July 22, 2019, 3:00 PM IST
பட்ஜெட் விலையில் புதிய மாற்றங்களுடன் புதிய பஜாஜ் CT110..!
பஜாஜ் CT 110. (image source: Bajaj)
Web Desk | news18
Updated: July 22, 2019, 3:00 PM IST
புதிய மாற்றங்களுடன் 37,997 ரூபாய்க்கு இந்தியாவில் புதிய பஜாஜ் CT110 பைக் வெளியிடப்பட்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோ சார்பில் கிக் ஸ்டார்ட் ரக CT110 பைக் 37,997 ரூபாய்க்கும் எலெக்ட்ரீக் ஸ்டார்ட் ரக பைக் 44,480 ரூபாய்க்கும் விற்பனைக்கு உள்ளது. பல்வேறு நிலப்பகுதிகளுக்கும் ஏற்ப சக்கரங்கள், க்ரவுண்டு க்ளியரன்ஸ், க்ராஷ் கார்டு ஆகிய அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

115cc DTSi என்ஜின் உடன் 8.4hp மற்றும் 5,000 rpm-க்கு 9.81Nm என்ற அளவீட்டில் டார்க் வெளியீடு உள்ளது. மிகவும் அசத்தலான தோற்றம், இருக்கை அமைப்பு என அசத்துகிறது பஜாஜ் CT110. இதுகுறித்து பஜாஜ் மோட்டார்சைக்கிள்ஸ் தலைவர் சராங் கனாடே கூறுகையில், “பட்ஜெட் விலையில் மக்களுக்கு ஏற்ற அப்டேட்களுடன் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காகவே CT பைக்குகள் வெளியிடப்படுகின்றன.


இதுவரையில் 50 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் CT பைக்குகளை உபயோகப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாகவும் வடிவமைப்பு மற்றும் டெலிவரியிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். நீண்ட கால பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலும் அதிக மைலேஜ் தரும் பைக் ஆகவும் தொடர்ந்து CT ரக பைக்குகள் உள்ளன. இன்னும் அதிகத் திறன் கொண்டதாகவே வந்துள்ளது CT110” என்றார்.

மூன்று வண்ண நிறங்களில் CT110 வெளிவந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பஜாஜ் ஆட்டோ டீலர்ஷிப் இடங்களில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கான CT110 பைக்கைப் பெற்றுக்கொள்ளலான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு நடுவே டெஸ்ட் ட்ரைவ்-ல் தென்பட்ட மஹிந்திரா தார் 2020..!
First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...