மீண்டும் தள்ளிப்போனது KTM Duke 790 வெளியீடு: இந்தியாவில் 2020-ல் அறிமுகமாக வாய்ப்பு!

KTM Duke 790 மாடல் பைக் கடந்த 2018-ம் ஆண்டு மிலன் நகரில் நடந்த ஒரு கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

மீண்டும் தள்ளிப்போனது KTM Duke 790 வெளியீடு: இந்தியாவில் 2020-ல் அறிமுகமாக வாய்ப்பு!
KTM 790 Duke 2018, (Image: KTM)
  • News18
  • Last Updated: June 10, 2019, 11:44 AM IST
  • Share this:
KTM Duke 790 பைக் இந்த ஆண்டிலாவது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் வெளியீடு தள்ளிப்போயுள்ளது.

உறுதியளிப்புச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தின் காரணத்தால் மீண்டும் மீண்டும் இந்தியாவில் KTM Duke 790 வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது. சர்வதேச அளவில் சில நாடுகளில் KTM Duke 790 அறிமுகமாகியிருந்தாலும், இந்தியாவுக்கு மேலும் ஒரு ஆண்டு தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்பட்டதால் KTM Duke 790 பைக்குக்கான புக்கிங் ஏற்கெனவே இந்தியாவின் சில நகரங்களில் நடந்துள்ளது. சுமார் 30 ஆயிரம் ரூபாயில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர்களிடம் KTM நிர்வாகம் மன்னிப்புக் கோரியுள்ளது.


KTM Duke 790 மாடல் பைக் கடந்த 2018-ம் ஆண்டு மிலன் நகரில் நடந்த ஒரு கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. KTM ரசிகர்கள் பேராவலுடன் காத்திருந்த வேளையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய வெளியீடு மட்டும் தள்ளிப்போய் வருகிறது.

மேலும் பார்க்க: 2020 முதல் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே!- டொயோட்டா அதிரடி!
First published: June 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்