அதிரடியாக விலை குறைந்த KTM 790 ட்யூக்... இந்தியாவில் 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி!

விலைத் தள்ளுபடி உடன் KTM-UPSHIFT என்ற திட்டத்தின் கீழ் பைனான்ஸ் உதவியும் வழங்கப்படுகிறது.

அதிரடியாக விலை குறைந்த KTM 790 ட்யூக்... இந்தியாவில் 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி!
KTM Duke 790
  • News18
  • Last Updated: January 23, 2020, 1:46 PM IST
  • Share this:
இந்தியாவில் KTM 790 Duke பைக்குக்கு 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தள்ளுபடி குறைந்த நாள் சலுகை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சென்னை, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், சூரத், புனே, பெங்களூரு மற்றும் கவுகாத்தி ஆகிய நகரங்களில் உள்ள டீலர்கள் இச்சலுகையை நடைமுறைப்படுத்தி உள்ளனர். இந்த பைக்கின் விலை 8,63,945 ரூபாய் ஆகும்.

ஆஸ்திரிய நிறுவனமான KTM வருகிற ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் கூடுதலாக 30 நகரங்களில் ஸ்டோர்களைத் திறக்க முடிவு செய்துள்ளது. விலைத் தள்ளுபடி உடன் KTM-UPSHIFT என்ற திட்டத்தின் கீழ் பைனான்ஸ் உதவியும் வழங்கப்படுகிறது.


799 cc பேரலல் ட்வின், லிக்விட் கூல், 8 வால்வ் DOHC என்ஜின் பொருத்தப்பட்ட பைக் ஆக KTM 790 Duke உள்ளது. 105 hp உச்சகட்ட திறனில் டார்க் வெளியீடு 87 Nm ஆக உள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் சிறப்பம்சமாகும். ப்ளுடூத் கனெக்‌ஷன் கிடையாது. ஆனால், பைக்கில் உள்ள பவர் பார்ட்ஸ் மூலம் இச்சேவையையும் பெறலாம்.

மேலும் பார்க்க: இரண்டு பைக்குகளுக்கு ‘குட்பை’ சொல்கிறது ராயல் என்ஃபீல்டு!
First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading