ஜாவா மோட்டார் சைக்கிள் புக் செய்திருக்கிறீர்களா...? இன்னும் 10 மாசம் காத்திருக்கணும்!

சென்னை மக்கள் 9 மாதங்களுக்கு காத்திருக்க வேண்டும் என ஜாவா சார்பில் முன்பதிவு செய்தவர்களிடத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 12, 2019, 1:42 PM IST
ஜாவா மோட்டார் சைக்கிள் புக் செய்திருக்கிறீர்களா...? இன்னும் 10 மாசம் காத்திருக்கணும்!
ஜாவா 42. (Image: Jawa)
Web Desk | news18
Updated: July 12, 2019, 1:42 PM IST
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் சார்பில் மூன்று புதிய பைக்குகள் குறித்த அறிவிப்பு வெளியானது.

ஜாவா பைக்குகள் குறித்த அறிவிப்பு இந்தியாவில் வெளியானது முன்பதிவு செய்த ஜாவா பிரியர்கள் தற்போது பைக் எப்போது கைக்கு வரும் என தவித்து வருகின்றனர்.

ஜாவா நிறுவனமும் அதிகப்படியான முன்பதிவுகளால் திணறி முன்பதிவையும் நிறுத்திவிட்டது. பதிவு செய்தவர்களுக்கு தற்போது பைக்கை டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜாவா பைக் 1.64 லட்சம் ரூபாய்க்கும் ஜாவா 42  மாடல் 1.55 லட்சம் ரூபாய்க்கும் விற்பனைக்கு வரும். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலையில்தான் ஜாவா பைக்குகள் தயாராகி வருகின்றன.


டெல்லி மற்றும் பெங்களுரூ நகர மக்கள் இன்னும் 8 மாத காலத்துக்குக் காத்திருக்குமாறு ஜாவா கோரிக்கை வைத்துள்ளது. இதேபோல், மும்பை, கொல்கட்டா மக்கள் 7 மாதங்களுக்கும் ஹைதராபாத் மற்றும் சென்னை மக்கள் 9 மாதங்களுக்கும் பூனே நகர மக்கள் அதிகப்பட்சமாக 10 மாதங்களுக்கும் காத்திருக்க வேண்டும் என ஜாவா சார்பில் முன்பதிவு செய்தவர்களிடத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: எலெக்ட்ரிக் வாகன விற்பனையை 6-7 மில்லியனாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!
First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...