விற்பனையில் அடித்து நொறுக்கிய ஜாவா பைக்குகள்! அடுத்த செப்டம்பர் வரை புக்கிங் இல்லை!

இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரும் ஜாவா பைக்குகள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

Rahini M | news18
Updated: December 24, 2018, 6:27 PM IST
விற்பனையில் அடித்து நொறுக்கிய ஜாவா பைக்குகள்! அடுத்த செப்டம்பர் வரை புக்கிங் இல்லை!
jawa motorcycles
Rahini M | news18
Updated: December 24, 2018, 6:27 PM IST
2019-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கால்பதிக்க உள்ளது ’க்ளாசிக் லெஜெண்ட்ஸ்’ நிறுவனத்தின் ஜாவா பைக்குகள். ஆனால், அதற்குள்ளாகவே அனைத்து பைக்குகளும் புக் செய்யப்பட்டுள்ளதால் இனி அடுத்த செப்டம்பர் மாதம் வரையில் ஜாவா பைக்குகள் விற்பனைக்கும் இல்லை புக்கிங்க்கும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து ‘க்ளாசிக் லெஜெண்ட்ஸ்’ நிறுவனம் ஜாவா பைக்குகளை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வந்தது. மார்ச் 2019-ல் பைக்குகள் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் என்றும் முதற்கட்டமாக புனேவில் புக்கிங் நடைபெறும் என்றும் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கான புக்கிங் தொடங்கிய சில நாள்களிலேயே தற்போது மூடப்பட உள்ளது.

ஜாவா பைக்குகள் மீதான அதிக எதிர்பார்ப்பின் காரணமாக நிறுவனமே எதிர்பார்க்காத அளவுக்கு புக்கிங் நடந்துள்ளது. இதனால் மிரண்ட ‘க்ளாசிக் லெஜண்ட்ஸ்’ நிறுவனம், “வாடிக்கையாளர்கள் அளித்த பெரும் ஆதரவுக்கு நன்றி. புக்கிங் டிசம்பர் 25-ம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. அடுத்த இனி 2019 செப்டம்பரில் தான் அடுத்த புக்கிங் தொடங்கும்” என அறிவித்துள்ளது.

கடந்த வாரம் டீலர்ஷிப்களைத் தொடங்க இருப்பதாக அறிவித்த நிறுவனம், ஆலைன் புக்கிங் மூலமாகவே மொத்தமும் விற்பனை ஆனதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது. புக்கிங் செய்த வாடிக்கையாளர்களை தற்போது டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்க அழைப்பு விடுத்துள்ளது ‘க்ளாசிக் லெஜெண்ட்ஸ்’.

மேலும் பார்க்க: ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை - பொன்.ராதாகிருஷ்ணன்
First published: December 24, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...