வருகிறது ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ்... உற்சாகத்தில் ’க்ளாசிக் லெஜண்ட்ஸ்’...!

முதலாவதாக புனேவில் ஜாவா பைக்குகளுக்கான டீலர்ஷிப் தொடங்கப்பட்டுள்ளது. விற்பனை, சேவை, மற்றும் சீரமைப்பு என அனைத்தும் இந்த 105 ஷோரும்களிலும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: December 16, 2018, 12:08 PM IST
வருகிறது ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ்... உற்சாகத்தில் ’க்ளாசிக் லெஜண்ட்ஸ்’...!
Jawa (Image: Jawa Motorcycles)
Web Desk | news18
Updated: December 16, 2018, 12:08 PM IST
’க்ளாசிக் லெஜெண்டஸ்’ நிறுவனத்தின் பெரு முயற்சியில் மீண்டும் ஜாவா பைக்குகள் இந்திய சாலைகளில் சீறக் காத்திருக்கின்றன.

2019-ன் தொடக்கத்தில் இந்தியாவில் களம் காண்கிறது ஜாவா பைக்குகள். அதற்கு முன்னதாக நாட்டில் 105 நகரங்களில் தனது அவுட்லெட்டுகளைத் தொடங்குகிறது ‘க்ளாசிக் லெஜெண்ட்ஸ்’.

முதலாவதாக புனேவில் ஜாவா பைக்குகளுக்கான டீலர்ஷிப் தொடங்கப்பட்டுள்ளது. விற்பனை, சேவை, மற்றும் சீரமைப்பு என அனைத்தும் இந்த 105 ஷோரும்களிலும் இருக்கும் என்றும் க்ளாசிக் லெஜெண்டஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜாவா மோட்டார் பைக்குகளை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டுமென முயற்சித்து அனுமதி வாங்கியது ‘க்ளாசிக் லெஜெண்ட்ஸ்’. இந்த நிறுவனத்தின் 60 சதவிகித பங்குகள் மஹிந்திரா நிறுவனத்திடமே இருப்பதால் கடந்த ஒரு மாதமாக ஜாவா மோட்டார் பைக்குகளுக்கான விளம்பரம் மிகவும் அதிகமாக இருந்தது.

முதற்கட்டமாக புனேவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஜாவா பைக்குகள் மீதான புக்கிங் தொடங்கப்படுகிறது. புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளை டெஸ்ட் ட்ரைவ்-க்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் பொம்மன் இராணி கூறுகையில், “க்ளாசிக் ரக பைக் ஆன ஜாவா பைக்குகளை மீண்டும் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம். ஜாவா பைக்குகளுக்கான ரசிகர்கள் இன்னமும் இந்தியாவில் உள்ளனர். பைக் பிரியர்களுக்கு இது மிகவும் நல்ல செய்தியாக இருக்கும்” எனக் கூறினார்.

மேலும் பார்க்க: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல்காந்தி
Loading...
First published: December 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...