இந்தியாவின் முதல் எத்தனால் பைக்கை அறிமுகம் செய்த டி.வி.எஸ்!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிதான், இந்தியாவின் முதல் எத்தனால் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Web Desk | news18
Updated: July 13, 2019, 10:53 PM IST
இந்தியாவின் முதல் எத்தனால் பைக்கை அறிமுகம் செய்த டி.வி.எஸ்!
எத்தனால் பைக்
Web Desk | news18
Updated: July 13, 2019, 10:53 PM IST
எத்தனால் எரிபொருளாள் இயங்கும் இந்தியாவின் முதல் இருசக்கர வாகனத்தை டி.வி.எஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இயற்கை எரிபொருளால் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும்படி மத்திய அரசு அழுத்தம் அளித்து வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த எத்தனால் எரிபொருளால் இயங்கும் அப்பாச்சி ஆர்டிஆர் 200 Fi E100 என்ற வாகனத்தை டி.வி.எஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 100 சதவீத எத்தனால் கிடைக்காததை கருத்தில் கொண்டு 80 சதவீதம் எத்தனால் 20 சதவிகிதம் பெட்ரோல் ஆகியவற்றை கொண்டு இந்த வாகனம் இயங்கும். முதலில் மகராஷ்டிரா, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் விற்பனைக்கு வரும் என்றும் வரிகளுக்கு முந்தைய ஷோரூம் ஆரம்ப விலை 1,20,000 ரூபாய் என்றும் டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிதான், இந்தியாவின் முதல் எத்தனால் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக எத்தனாலை உற்பத்தி செய்யும்படி கரும்பு ஆலைகளுக்கு நிதின் கட்கரி தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also watch: வருடம் முழுவதும் சம்பாதிக்கணும்னா? அடுக்கு முறை விவசாயம் பண்ணலாம்... எப்படி செய்வது?

First published: July 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...