70 ஆண்டுகளில் 400 மில்லியன் வாகனங்கள் விற்பனை... பிரம்மாண்ட சாதனை படைத்த ஹோண்டா!

வரலாற்றிலேயே முதன்முறையாக ஆண்டுக்கு 20 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்த முதல் நிறுவனம்

70 ஆண்டுகளில் 400 மில்லியன் வாகனங்கள் விற்பனை... பிரம்மாண்ட சாதனை படைத்த ஹோண்டா!
ஹோண்டா
  • News18
  • Last Updated: December 22, 2019, 5:58 PM IST
  • Share this:
ஹோண்டா நிறுவனம் தனது முதல் ட்ரீம் D-Type மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் முதன்முறையாக ட்ரீம் D-Type மோட்டர்சைக்கிளை 1949-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. 70-வது ஆண்டு விழா கொண்டாடி வரும் இந்நிறுவனம் இதுவரையில் சுமார் 400 மில்லியன் வாகனங்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது.

ஹோண்டா நிறுவனம் 1948 ஆண்டு உருவானது. முதல் சர்வதேச விற்பனையை 1963-ம் ஆண்டு பெல்ஜியத்தில் இருந்து தொடங்கியது. உலகம் முழுவதும் தேவை இருக்கும் நாடுகளைக் கண்டறிந்து தனது விற்பனையை விரிவு செய்து வந்த ஹோண்டா இன்று சர்வதேச இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுள் முன்னணியில் உள்ளது.


ஹோண்டாவுக்கு தற்போது 21 நாடுகளில் கிளைகள் உள்ளன. தனது 100 மில்லியன் வாகன விற்பனை என்னும் மைல்கல்லை கடந்த 1997-ம் ஆண்டு எட்டிய ஹோண்டா 300 மில்லியன் என்னும் மைல்கல்லை 2014-ம் ஆண்டு அடைந்தது. வரலாற்றிலேயே முதன்முறையாக ஆண்டுக்கு 20 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற சர்வதேச வரலாற்று அங்கீகாரத்தையும் ஹோண்டா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: உள்நாட்டிலேயே தயாரான முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி... டாடா நெக்ஸான் முன்பதிவு தொடக்கம்...!
First published: December 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading