1.05 லட்சம் ரூபாய்... பைக் பிரியர்களை உற்சாகப்படுத்திய Hero XPulse 200 வெளியீடு!

Xtreme 200R அடிப்படையிலேயே புதிய ஹீரோ X பல்ஸ் 200 மற்றும் ஹீரோ X பல்ஸ் 200T உருவாக்கப்பட்டிருந்தாலும் நீண்ட தூரம் பயணங்களுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1.05 லட்சம் ரூபாய்... பைக் பிரியர்களை உற்சாகப்படுத்திய Hero XPulse 200 வெளியீடு!
ஹீரோ எக்ஸ் 200 பல்ஸ் (Image: Manav Sinha/News18.com)
  • News18
  • Last Updated: May 1, 2019, 8:23 PM IST
  • Share this:
பைக் பிரியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் ஹீரோ X  சீரிஸ் வரிசையில் இன்று அறிமுகமாகியுள்ளது Hero XPulse 200.

அட்வென்சர் பைக் பிரியர்களுக்காகவே ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்தின் சார்பில் ஹீரோ X பல்ஸ் 200 மற்றும் ஹீரோ X பல்ஸ் 200T ஆகிய இரு பைக்குகள் வெளியாகி உள்ளன. ஹீரோ X பல்ஸ் 200 கார்பரேடட் வெர்ஷன் 97,000 ரூபாய்க்கும் எரிபொருள் செலுத்தப்பட்ட வெர்ஷன் 1.05 லட்சம் ரூபாய்க்கும் விற்பனைக்கு உள்ளது.

ஹீரோ X பல்ஸ் 200T பைக்குக்கு 94,000 ரூபாய் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அட்வென்சர் மோட்டார் சைக்கிள் வகைகளிலேயே மிகவும் மலிவான பைக் ஆக ஹீரோ X பல்ஸ் ரக பைக்குகள் உள்ளன. Xtreme 200R அடிப்படையிலேயே புதிய ஹீரோ X பல்ஸ் 200 மற்றும் ஹீரோ X பல்ஸ் 200T உருவாக்கப்பட்டிருந்தாலும் நீண்ட தூரம் பயணங்களுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


மட்கார்டு, என்ஜின் ப்ளேட், நக்குல் கார்டு ஆகியவை நீண்ட தூர பயணங்களுக்காகவே அப்டேட் செய்யப்பட்டுள்ளன. சியட் டயர்கள் பொருத்தப்பட்ட இவ்விரு பைக்குகளுக்கும் 21 இன்ச் யூனிட் முன் பக்கமும் 18 இன்ச் சக்கரம் பின்புறமும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் ஏபிஎஸ் பொருத்தப்பட்டே பைக்குகள் வெளியாகி உள்ளன.

மேலும் பார்க்க: 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை முயற்சி!
First published: May 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading