ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக்... இந்தியப் பதிப்பின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

15.5 kWh பேட்டரி திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக் ஆக வெளியாகிறது வைவ்வயர்.

ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக்... இந்தியப் பதிப்பின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!
ஹார்லி டேவிட்சனின் ‘லைவ்வயர்’
  • News18
  • Last Updated: August 27, 2019, 4:52 PM IST
  • Share this:
ஹார்லி டேவிட்சனின் ‘லைவ்வயர்’ என்னும் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு EICMA மோட்டார்சைக்கிள் கண்காட்சியின் போது ‘லைவ்வயர்’ குறித்த முதல் அறிவிப்பு வெளியானது. அதுமுதல் ‘லைவ்வயர்’ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தே காணப்பட்டது. ஐந்து ஆண்டுகால முயற்சிக்குப் பின்னர் தற்போது விற்பனைக்குத் தயாராகி உள்ளது லைவ்வயர்.

15.5 kWh பேட்டரி திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக் ஆக வெளியாகிறது வைவ்வயர். இதேபோல் திறன் வெளியீடு 104.6 bhp ஆகவும் டார்க் வெளியீடு 116 Nm ஆகவும் உள்ளது. வெறும் 3.5 விநாடிகளிலே மூன்று இலக்க வேகத்தை எட்டும் பைக் ஆக லைவ்வயர் இருக்கும். ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 235 கிமீ வரையில் பயணிக்க முடியும்.


நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்றவாறும் லைவ்வயர் மேம்படுத்தப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹார்லி டேவிட்சன் தெரிவித்துள்ளது. பெரும் பலமாக TFT டச்ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: எரிபொருளுக்கான கடன் மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாய்! ஏர் இந்தியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்

சென்னையில் இயக்கப்பட உள்ள மின்சார பேருந்தின் சிறப்பம்சங்கள் என்ன?
First published: August 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading