இந்தியாவில் பத்தாம் ஆண்டு வெற்றி விழாவைக் கொண்டாடும் ஹார்லி டேவிட்சன்!

க்ளாசிக் பைக்குகளை தொடர்ந்து உற்பத்தி செய்து வரும் ஹார்லி, டேவிட்சன் 10-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தியாவுக்காக புதிதாக இரண்டு பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளது.

Web Desk | news18
Updated: February 22, 2019, 11:15 AM IST
இந்தியாவில் பத்தாம் ஆண்டு வெற்றி விழாவைக் கொண்டாடும் ஹார்லி டேவிட்சன்!
Representative image (AP)
Web Desk | news18
Updated: February 22, 2019, 11:15 AM IST
இந்தியாவில் வெற்றிகரமாக பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது பிரபல மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனமான ஹார்லி டேவிட்சன்.

சர்வதேச அளவில் ஹார்லி டேவிட்சனின் வயது 116 ஆகும். க்ளாசிக் பைக்குகளை தொடர்ந்து உற்பத்தி செய்து வரும் ஹார்லி, டேவிட்சன் 10-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தியாவுக்காக புதிதாக இரண்டு பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளது.

10 ஆண்டு நிறைவு விழா குறித்து ஹார்லி டேவிட்சனின் இந்திய இயக்குநர் மேலாளர் சஜீவ் ராகசேகரன் கூறுகையில், “மோட்டார்சைக்கிள் உலகில் இந்தியாவினுள் ஹார்லி டேவிட்சன் பலமான என்ட்ரி கொடுத்தது. பைக் பிரியர்களின் விருப்பமாக இருந்து வரும் எங்கள் ஹார்லி டேவிட்சனுக்கு 10 ஆண்டுகள் என்பது புதிய பாதைக்கான தொடக்கமாகவே இருக்கும்.

எங்களது டீலர்கள், வாடிக்கையாளர்கள், ரைடர்கள், ரசிகர்கள் என அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் டீலர்கள் மொத்தம் 31 பேர். பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 18-ம் தேதி முதல் ரைடர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஹார்லி டேவிட்சனை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

புதிதாக 2020-ம் ஆண்டு 1250 அட்வென்சர் டூரிங் மாடல் மற்றும் 975cc ஸ்ட்ரீட்ஃபைட்டர் ஆகிய இரண்டு புதிய பைக்குகள் அறிமுகம் ஆக உள்ளன.

மேலும் பார்க்க: கிரிக்கெட் தமிழன்... விஜய் சங்கருடன் சிறப்பு நேர்காணல்
Loading...
First published: February 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...