அட்வென்சர் பிரியரா? இந்தியாவுக்கு வந்தது பெனெல்லி TRK 502, TRK 502X

பென்னெலி TRK 502 பைக்குக்கான புக்கிங் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாயை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

Web Desk | news18
Updated: February 19, 2019, 2:44 PM IST
அட்வென்சர் பிரியரா? இந்தியாவுக்கு வந்தது பெனெல்லி TRK 502, TRK 502X
பென்னெலி பைக்
Web Desk | news18
Updated: February 19, 2019, 2:44 PM IST
அட்வென்சர் பிரியர்களுக்கான அசத்தல் TRK 502 பைக்கை முதன்முதலாக இந்தியாவில் களம் இறக்கியுள்ளது பென்னெலி.

கடந்த ஆண்டு மஹாவீர் குழுமத்துடன் ஒப்பந்தமிட்ட பென்னெலி, இந்தியாவில் முதன்முறையாக TRK 502 பைக் மூலம் தடம் பதிக்க உள்ளது. பென்னெலி TRK 502 தொடக்க விலையாக 5 லட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆஃப்-ரோடு விலை 5.40 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சூப்பர் அட்வென்சர் பைக்குகளான கவாஸ்கி வெர்சிஸ் 650, சுசூகி V-Strom 650 XT, SWM SueprDual T, Kawasaki Versys X-300, BMW G 310 GS மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஆகிய அத்தனை ஜாம்பவான்களுக்கும் போட்டியாக அமையும் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் அட்வென்சர் பைக் பிரியர்கள் அதிகரித்து வருவதால் இத்தாலிய நிறுவனமான பென்னெலி இந்தியாவில் களம் இறங்கியுள்ளதாகக் கூறியுள்ளது.

பென்னெலி TRK 502 பைக்குக்கான புக்கிங் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் 10ஆயிரம் ரூபாயை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள முடியும். முந்தும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் ஆஃபராக இந்த 10ஆயிரம் ரூபாயை பைக் டெலிவரியின் போது திருப்பி அளிக்க உள்ளது பென்னெலி இந்தியா.

மேலும் பார்க்க: திருடப்பட்ட பைக் ஜி.பி.ஆர்.எஸ் மூலம் 3 மணி நேரத்தில் மீட்பு...!
First published: February 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...