5 ஆண்டுகளுக்கான வாரண்டியுடன் இந்தியாவுக்குக் களமிறக்கப்பட்ட பெனெல்லி லியான்சினோ 500..!

5.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெனெல்லி TRK502 பைக்கை விட புதிய லியான்சினோ 500 31ஆயிரம் ரூபாய் குறைவாகவே உள்ளது.

5 ஆண்டுகளுக்கான வாரண்டியுடன் இந்தியாவுக்குக் களமிறக்கப்பட்ட பெனெல்லி லியான்சினோ 500..!
பெனெல்லி லியான்சினோ 500
  • News18
  • Last Updated: August 5, 2019, 10:11 PM IST
  • Share this:
இந்தியாவில் பெனெல்லி பைக் ரகங்களுள் ஒன்றான லியான்சினோ 500 வெளியிடப்பட்டுள்ளது.

4.79 லட்சம் ரூபாய்க்கு இந்தியாவில் பெனெல்லி லியான்சினோ 500 பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு, ட்ரைய்ல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று ரகங்களில் இப்புதிய பைக் விற்பனைக்கு உள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் ஸ்டாண்டர்டு ரக பைக்குகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளன.

பெனெல்லி நிறுவனம் தனது லியான்சினோ 500 பைக்குக்கான முன்பதிவைத் தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். கூடுதலாக, 5 ஆண்டுகளுக்கான அன்லிமிடெட் கிலோமீட்டர் வாரண்டி இந்த மோட்டார் பைக்குக்குக் கொடுக்கப்படுகிறது.


499.6cc லிக்விட் கூல் என்ஜின் உடன் இரு சிலிண்டர்கள் பொருத்தப்பட்ட லியான்சினோ 500 பைக்கின் திறன் 47.6 hp ஆகவும் டார்க் வெளியீடு 45Nm ஆகவும் உள்ளது. 17 இன்ச் சக்கரங்களுடன் அதிகப்பட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் பென்னெல்லி லியான்சினோ 500 இருக்கிறது.

5.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெனெல்லி TRK502 பைக்கை விட புதிய லியான்சினோ 500 31ஆயிரம் ரூபாய் குறைவாகவே உள்ளது.
First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...