டெஸ்லா மாடலில் அறிமுகமாகும் பஜாஜின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

வருங்காலம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கானது என்பதைப் பெரிதும் நம்புவதாக முன்னதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்திருந்தது.

Web Desk | news18
Updated: December 22, 2018, 11:09 AM IST
டெஸ்லா மாடலில் அறிமுகமாகும் பஜாஜின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
ராஜிவ் பஜாஜ்
Web Desk | news18
Updated: December 22, 2018, 11:09 AM IST
2019-ம் ஆண்டில் டெஸ்லா மாடலை அடிப்படையாகக் கொண்டு பஜாஜ் புதிய வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

வருங்காலம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கானது என்பதைப் பெரிதும் நம்புவதாக முன்னதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் உயர் ரக டெஸ்லா மாடலை அடிப்படையாகக் கொண்ட புதிய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை 2019-ம் ஆண்டில் பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ் கூறுகையில், “பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் சொகுசு ரக எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறது. இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் பல்சர் 60 சதவிகித வளர்ச்சி, ப்ளாட்டினா 50-60% வளர்ச்சி, சிடி 100 25-30% வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

எனது தொழில் வளர்ச்சியில் 100சிசி வகை பைக்குகளை அறிமுகம் செய்ததே எங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் தவறாகப் பார்க்கிறேன். இதனால் தான் முதலிடத்திலேயே இருந்த பஜாஜ் நிறுவனத்தின் வளர்ச்சி குன்றி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

ஆனால், 125சிசி-ல் அறிமுகமான டிஸ்கவர் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்த ஆறு மாதங்களில் இரு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களைச் சேர்த்து 4 லட்சம் வாகனங்கள் விற்பனையாவது சிறப்பான வளர்ச்சியைத் தரும். விழாக்கால நேரம் என்பதால் தற்போது 5 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி உள்ளன” என்றார்.

மேலும் பார்க்க: ஸ்டாலினை விமர்சித்த தினகரன்... அரசியல் நோக்கர்களின் கருத்து என்ன?
Loading...
First published: December 22, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...