நான்கு பைக்குகளுடன் இந்தியச் சந்தைக்குள் நுழைந்தது AMW-CFமோட்டோ..!

CFமோட்டோ 650GT ஸ்போர்ட்ஸ் ரக பைக் ஆகும். 649.3cc லிக்விட் கூல் என்ஜின், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் அம்சமாக உள்ளது இந்த பைக்.

Web Desk | news18
Updated: July 21, 2019, 6:58 PM IST
நான்கு பைக்குகளுடன் இந்தியச் சந்தைக்குள் நுழைந்தது AMW-CFமோட்டோ..!
CFmoto GT 650 and MT 650. (Image source: Manav Sinha/News18.com)
Web Desk | news18
Updated: July 21, 2019, 6:58 PM IST
CFமோட்டோ உடன் இணைந்து AMW மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய பைக் ரசிகர்களைக் குஷிபடுத்துவதற்காகவே நான்கு புது பைக்குகளுடன் இந்தியச் சந்தையில் களம் இறங்கியுள்ளது.

AMW-CFமோட்டோ 300NK, 650NK, 650MT மற்றும் 650GT ஆகிய நான்கு பைக்குகள் இந்தியாவில் முதற்கட்டமாக அறிமுகம் ஆகியுள்ளன. இதுகுறித்து AMW மோட்டார்சைக்கிள் நிறுவன சிஇஓ வம்சி கிருஷ்ண ஜகினி கூறுகையில், “இந்தியச் சந்தையில் நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பின்னர் இந்த நான்கு பைக்குகள் வெளியாகி உள்ளன.

CFமோட்டோ உடன் இணைந்து அவர்களின் சர்வதேசத் தரத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம். இந்த கேட்டகரி பைக்குகளுக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது” என்றார்.


இந்தியாவில் அறிமுகமாகியுள்ள நான்கு பைக்குகள்:

- CFமோட்டோ 300NK ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகம். இரு ரைடிங் மோட், டிஎஃப்டி கலர் டிஸ்ப்ளே, எல்இடி லைட்டிங், ரியர் மட்கார்டு ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. 299cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

- CFமோட்டோ 650NK-வும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகம்தான். அதிரடியான தோற்றத்துடன் மிகவும் கவர்கிறது.

Loading...

- CFமோட்டோ 650MT அட்வென்சர் பைக் ரகம். 649.3cc லிக்விட் கூல் என்ஜின், உயர்ந்த விண்ட் ஸ்கிரீன், அசத்தல் ரைடிங் சீட், 18 லிட்டர் பெட்ரோல் டேங்க் என இந்த பைக்கும் அசத்துகிறது.

- CFமோட்டோ 650GT ஸ்போர்ட்ஸ் ரக பைக் ஆகும். 649.3cc லிக்விட் கூல் என்ஜின், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் அம்சமாக உள்ளது இந்த பைக்.

மேலும் பார்க்க: இந்தியாவில் முதல் பொட்டிக் ஷோரூம் தொடங்கிய ஜாகுவார்..!
First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...