புதிய வண்ணம்... புதிய விலையுடன் 2020 கவாஸ்கி நின்ஜா ZX-10R..!

கவாஸ்கி நின்ஜா ZX-10R வண்ண பிரதபலிப்பாகவே 2020 நின்ஜா 400 பைக்கும் இந்தியாவுக்கும் வரும் என்கிறது ஜப்பானிய நிறுவனமான கவாஸ்கி.

Web Desk | news18
Updated: August 26, 2019, 1:01 PM IST
புதிய வண்ணம்... புதிய விலையுடன் 2020 கவாஸ்கி நின்ஜா ZX-10R..!
2019 கவாஸ்கி நின்ஜா ZX-10R
Web Desk | news18
Updated: August 26, 2019, 1:01 PM IST
புதிய வண்ணத்தில் ஸ்போர்ட்டி தோற்றத்துடன் 2020 கவாஸ்கி நின்ஜா ZX-10R பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கருப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் ஆங்காங்கே தங்க நிற ஹைலட்டர்கள் உடன் மிளிர்கிறது புதிய கவாஸ்கி நின்ஜா ZX-10R. தோற்றத்தில் மட்டுமே மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. செயல்பாடுகளில் கவாஸ்கி நின்ஜா ZX-10R பைக்கில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. வருகிற அக்டோபர் முதல் விற்பனைக்குத் தயாராக உள்ள கவாஸ்கி நின்ஜா ZX-10R 2020 மாடலின் விலை 13.99 லட்சம் ரூபாய் ஆகும்.

கவாஸ்கி நின்ஜா ZX-10R வண்ண பிரதபலிப்பாகவே 2020 நின்ஜா 400 பைக்கும் இந்தியாவுக்கும் வரும் என்கிறது ஜப்பானிய நிறுவனமான கவாஸ்கி. 11,200 rpm என்ற கணக்கில் டார்க் வெளியீடு 114.9 Nm ஆக உள்ளது. 998 cc நான்கு சிலிண்டர்கள் உடனான என்ஜின் என நின்ஜா ZX-10R 2020 அசத்துகிறது.


6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல், மூன்று ரைடிங் மோட், 6 ஆக்சிஸ் IMU, என்ஜின் ப்ரேக் கன்ட்ரோல், ஏபிஸ் என அத்தனை நவீன அப்டேட்களுடன் களம் இறக்கப்பட்டுள்ளது நின்ஜா ZX-10R. வழக்கம்போல் சிங்கிள் சீட்டர் ரகமாகவே வெளியாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

டுகாட்டி பனிகேல் V4, சுசூகி GSX-R1000, ஹோண்டா CBR-1000RR, யமஹா YZF-R1, பிஎம்டபிள்யூ S 1000 RR மற்றும் அப்ரில்லியா RSV4 RR ஆகிய பைக்குகளுக்கு கடும் போட்டியாக 2020 கவாஸ்கி நின்ஜா ZX-10R இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் ரக க்ராண்ட் i10 கார் உற்பத்தியை நிறுத்த ஹூண்டாய் முடிவு!

Loading...

மேலும் பார்க்க: ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால் வேலையிழப்பு அபாயம்!
First published: August 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...