1 லட்சம் ரூபாய்க்கு சுசூகி கிக்ஸர் 2019- புதிய வெர்ஷனில் என்ன சிறப்பு?

டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V மற்றும் யமஹா FZ-S ஆகிய பைக்குகளுக்கு கிக்ஸர் 2019 போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 லட்சம் ரூபாய்க்கு சுசூகி கிக்ஸர் 2019- புதிய வெர்ஷனில் என்ன சிறப்பு?
சுசூகி கிக்ஸர் 2019 (Photo: Suzuki Motorcycles India)
  • News18
  • Last Updated: July 12, 2019, 10:14 PM IST
  • Share this:
சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிக்ஸர் பைக்கின் 2019 வெர்ஷனை வெளியிட்டுள்ளது.

சுசூகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சமீபத்தில் புதிய கிக்ஸர் SF மற்றும் கிக்ஸர் SF 250 பைக்குகளை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது கிக்ஸரின் 2019 என்னும் புதிய வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. கிக்ஸர் SF 250 பைக்கின் வடிவமைப்பு மற்றும் ஸ்டைலை அடிப்படையாகக் கொண்டே புதிய கிக்ஸர் களமிறக்கப்பட்டுள்ளது.

பழைய கிக்ஸரில் இருந்து அதிகம் மாற்றப்பட்டிருப்பது ஹெட்லைட்தான். நவீன ட்ரெண்ட்-க்கு ஏற்ப நீள்வட்ட வடிவிலான எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்போர்ட் லுக் தருவதற்காக பைக் சக்கரங்களும் நவீனமானதாகப் பொருத்தப்பட்டுள்ளன.


பழைய கிக்ஸரைப் போலவே புது வெர்ஷனிலும் 155cc சிங்கிள் சிலிண்டரே உள்ளது. 5 ஸ்பீடு கியர் கொண்ட இந்தப் புது கிக்ஸரின் திறன் 14.1 PS ஆகவும் டார்க் வெளியீடு 14 Nm ஆகவும் உள்ளது. எரிபொருள் டேங்க் கொள்ளளவு 12 லிட்டர் ஆக உள்ளது.

புதிய கிக்ஸர் 2019-ன் விலை 11,822 ரூபாய் அதிகரித்து 1 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வந்துள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V மற்றும் யமஹா FZ-S ஆகிய பைக்குகளுக்கு கிக்ஸர் 2019 போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: ஜாவா மோட்டார் சைக்கிள் புக் செய்திருக்கிறீர்களா...? இன்னும் 10 மாசம் காத்திருக்கணும்!
First published: July 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading