ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.! 

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.! 

Electric Vehicle Industry | இந்தியாவில் உள்ள முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார வாகனத் துறையில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் இந்தத் துறையிலிருந்து பெரும் லாபம் எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் மின்சார வாகனத் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக CIEL-யின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, ஊழியர்களின் எண்ணிக்கையில் சராசரியாக 108 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டில் மின்சார வாகனங்களை மேலும் ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்துள்ள கொள்கைகள் இந்தத் துறையில் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

“எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதில் இந்தியா ஒரு பெரிய மையமாக இருக்கப் போகிறது. இது ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் குறிக்கிறது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CIEL அறிக்கையில், “'எலெக்ட்ரிக் வாகன துறையில் சமீபத்திய வேலைவாய்ப்புப் போக்குகள் 2022' என்ற ஆய்வு அறிக்கை, மின்சார வாகனத் துறையில் 52 நிறுவனங்களில் 15,200 ஊழியர்கள் பணி செய்வதாக சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஊழியர்களின் எண்ணிக்கை சராசரியாக 108 சதவீதம் அதிகரித்துள்ளது. குறுகிய காலக்கட்டத்திலேயே அதாவது ஒரு வருடம் மற்றும் ஆறு மாதங்களில் முறையே 35 சதவிகிதம் மற்றும் 13 சதவிகிதம் அளவுக்கு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார வாகனத் துறையில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் இந்தத் துறையிலிருந்து பெரும் லாபம் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, ​​டாடா மோட்டார்ஸ் மின்சார வாகனத் துறையில் ரூ.15,000 கோடி முதலீடு செய்துள்ளது. மாருதி சுஸுகி ரூ.10,440 கோடியும், ஹூண்டாய் ரூ.4,000 கோடியும், மஹிந்திரா ரூ.3,000 கோடியும் முதலீடு செய்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், தனியார் ஈக்விட்டி நிறுவனங்களும் EV துறையில் தங்கள் முதலீட்டின் மதிப்பை 300% அதிகரித்துள்ளன. இந்தத் துறையில் ஸ்டார்ட் அப்களும் குறிப்பிடத்தக்க நிதியைப் பெற்றுள்ளன. நிறுவனங்கள் பேட்டரி தொழில்நுட்பம், பொது சார்ஜிங் நிலையங்களின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் கிரிட் வேலைகளில் அதிக முதலீடு செய்துள்ளன. NITI ஆயோக் கருத்துப்படி, 2020-30 க்குள் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பங்கு 30 சதவீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Also Read : உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை... எலெக்ட்ரிக் வாகனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் தெரியுமா.?

100 சதவீத அந்நிய முதலீட்டுக்கான சாத்தியக்கூறுகளுடன் இந்தியா எலெக்ட்ரிக் வாகன (EV) தொழில்துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது, உள்கட்டமைப்பு மேம்பாட்டிலும் அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது இத்துறையின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

FAME திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி வரை 1,65,000 க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் தேவை ஊக்கத்தொகையுடன் ஸ்பான்சர் செய்யப்பட்டுள்ளன. இதற்கு சுமார் ரூ.5.64 பில்லியன் செலவாகும். அறிக்கையின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 68 நகரங்களில் ரூ.5 பில்லியன் மதிப்புள்ள 6,315 மின்சார பேருந்துகள் மற்றும் 2,877 EV சார்ஜிங் நிலையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

EV துறைக்கான சிறந்த பணியாளர்களை கொண்ட இடங்கள்:

EV உற்பத்தியாளர்கள் தங்கள் நிறுவன இலக்குகளுக்கு ஏற்ப, சில மூலோபாய மத்திய-நிலை பணியமர்த்துகிறார்கள். எடுத்துக்காட்டாக, அசோசியேட்-லெவல் வேலைகள் 41% ஆகும், நடுத்தர-மூத்த நிலை வேலைகள் 34% ஆகும். 21% வேலை மட்டுமே நுழைவு நிலை பதவிகளுக்கானது.

Also Read : எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ரூ.10 லட்சம் வரை அரசே தள்ளுபடி... மாநில அரசின் ஆஃபரை பெறுவது எப்படி.?

CIEL'S EV அறிக்கையின்படி, EV துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஏற்ற முதல் இடமாக பெங்களூரு உள்ளது. ஏனெனில் இங்கு எலெக்ட்ரிக் வாகன துறையில் 62 சதவீத வேலை வாய்ப்புக்கள் உள்ளன. அடுத்ததாக டெல்லி NCR-யில் 12 சதவீத வேலை வாய்ப்புகளும்,புனேவில் 9 சதவீத வேலை வாய்ப்புக்களும் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கோவையில் 6 சதவீதமும், சென்னையில் 3 சதவீதமும் எலெக்ட்ரிக் வாகன துறையில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், EV நிறுவனங்களின் மையமாக கர்நாடகா உருவெடுத்துள்ளது. EVகள் மற்றும் அவற்றின் துணைப் பொருட்களை உற்பத்தி செய்யும் பிரபலமான நிறுவனங்களான மஹிந்திரா எலக்ட்ரிக், ஏதர் எனர்ஜி, ஓலா எலக்ட்ரிக் மற்றும் போஷ் ஆகியவை கர்நாடகாவில் அமைந்துள்ளது.

"ஆட்டோ தொழில்துறைக்கு பெரும்பாலும் மனிதர்களின் உடல் உழைப்பு தேவை அதிகம் தேவைப்படுகிறது. இந்தத் துறையில் 12 சதவீத வேலைகள் மட்டுமே தொலைதூரத்தில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 8% ஹைப்ரிட் மாடலில் இருக்கும்" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : 2023-க்குள் எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தவுள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்..!

இந்தத் துறையில் உள்ள நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுவதாகவும், அதில் மிகவும் கவனிக்கத்தக்க தலைப்பு 'மென்பொருள் பொறியாளர்' என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், AI, தரவு பகுப்பாய்வு, பயன்பாட்டு மேம்பாடு, இணைய பாதுகாப்பு மற்றும் IoT உள்ளிட்ட துறைகளில் எலெக்ட்ரிக் வாகன துறையில் தலைமைத்துவம் பெற்றவர்களை பணியமர்த்துவது அதிகரித்துள்ளது.

First published:

Tags: Automobile, Electric Cars, India