BH சீரிஸ் வாகன ரெஜிஸ்ட்ரேசன் என்றால் என்ன? - அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன?
BH சீரிஸ் வாகன ரெஜிஸ்ட்ரேசன் என்றால் என்ன? - அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன?
BH ரெஜிஸ்ட்ரேசன்
Bharat Series Vehicle Registration | நாடெங்கிலும் ஒரே நம்பர் பிளேட் செல்லுபடியாகும் வகையில், ‘BH ரெஜிஸ்ட்ரேசன்’ என்ற பெயரில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டமாகும்.
வாகனங்களின் நம்பர் பிளேட்களில் குறிப்பிடப்பட்டுள்ள இன்ஷியல்களை வைத்து அவை எந்த ஊரின் வாகனங்கள் என்பதை நாம் கணித்துச் சொல்ல முடியும். TN என்பது தமிழ்நாடு, புதுச்சேரி - PY, கேரளா - KL, டெல்லி - DL, மகாராஷ்டிரா - MH, ஹரியானா - HR. என ஒவ்வொரு மாநிலத்திற்கும் தகுந்தாற்போல இது மாறுபடும்.
ஆனால், இதுவரையிலும் ஒல்லாத ஒன்றாக இப்போது ‘BH’ என்ற அடையாளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது, நாடெங்கிலும் ஒரே நம்பர் பிளேட் செல்லுபடியாகும் வகையில், ‘BH ரெஜிஸ்ட்ரேசன்’ என்ற பெயரில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டமாகும். இதனால், ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்துக்கு நீங்கள் செல்லும்போது, நீங்கள் வாகனப் பதிவை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இந்த திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அறிமுகம் செய்தது. அதே ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்தத் திட்டத்தின் கீழ் ரிஜிஸ்ட்ரேசன் தொடங்கியது. கடந்த 1988 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மோட்டார் வாகன விதிகளின்படி, ஒரு மாநிலத்தில் நீங்கள் பதிவு செய்த வாகனத்தை, நீங்கள் மற்றொரு மாநிலத்தில் 12 மாதங்கள் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்கடுத்து, நீங்கள் வாகனப் பதிவை அந்த புதிய மாநிலத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால், மத்திய அரசு புதிதாக அமல்படுத்தியுள்ள விதிகளின்படி, நீங்கள் பிஹெச் சீரிஸில் உங்கள் வாகனத்தை பதிவு செய்திருந்தால், அதை எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
#BH-series: All you need to know about the new Bharat-series number plates
The BH series or the Bharat Series is a series of number plates for non-transport vehicles introduced in India on 28th August 2021. The registrations for the same started from 15th September 2021. pic.twitter.com/UUwd48SZAs
இது நாடு முழுக்க செல்லுபடியாகும் என்பதால், வாகன உரிமையாளர் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும்போது வாகனத்தின் பதிவு எண்ணை புதுப்பிக்கத் தேவையில்லை.
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வாகனத்தை பதிவு செய்யும்போது 2, 4, 6, 8 என்ற இரட்டை இலக்க ஆண்டுகளில் வரி செலுத்தினால் போதுமானது. ஆனால், நீங்கள் மாநில திட்டத்தில் பதிவு செய்யும்போது தொடர்புடைய மாநிலத்திற்கு ஏற்ப ஒரே மூச்சில் 15 முதல் 20 ஆண்டுகளுக்கான வரியை செலுத்தியாக வேண்டும்.
இந்த திட்டத்தில் எல்லோரும் சேர்ந்து விட முடியாது. மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இது பொருந்தும்.
ஒருவேளை நீங்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், உங்கள் நிறுவனத்திற்கு 4 மாநிலங்களுக்கு அதிகமான இடங்களில் கிளைகள் இருந்தால், இந்தத் திட்டத்தில் வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
பாதுகாப்பு படையினர், வங்கிப் பணியாளர்கள், பொது நிர்வாகப் பணிகளில் இருப்பவர்களுக்கு இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.