தண்ணீர் பாட்டில் கூட காரில் தீ விபத்தை ஏற்படுத்தும்- வெயில் எச்சரிக்கை!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான வெப்பம் மிகுந்த அனல்காற்று வீசி வருகிறது.

தண்ணீர் பாட்டில் கூட காரில் தீ விபத்தை ஏற்படுத்தும்- வெயில் எச்சரிக்கை!
மாதிரிப்படம். (Photo: Reuters/Gene Blevins)
  • News18
  • Last Updated: June 5, 2019, 4:54 PM IST
  • Share this:
கடுமையான வெப்பநிலையில் காரில் உள்ள ஒரு தண்ணீர் பாட்டில் கூட தீ விபத்தை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான வெப்பம் மிகுந்த அனல்காற்று வீசி வருகிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த தீ அணைப்பு வீரர்கள் தீ விபத்து குறித்த ஒரு விழிப்புணர்வை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, காரில் இருக்கும் தண்ணீர் பாட்டில் ஒன்றின் மீது கடுமையான வெயிலால் உங்கள் கார் கண்ணாடியை பூதக் கண்ணாடி போல செயல்பட்டு காரில் தீ விபத்து ஏற்பட காரணமாக அமையும் எனக் கூறப்படுகிறது.


அமெரிக்காவின் ஒக்லஹாமா தீஅணைப்பு வீரர் டேவிட் ரிச்சர்ட்சன் ஆய்வின் அடிப்படையில், காரில் இருக்கும் தண்ணீர் பாட்டில் ஒரு தூண்டுகோலாக செயல்பட்டு வெயில் காலத்தில் காரில் சீட் கவர், மேட் போன்றவை எளிதில் தீபிடிக்கும் சூழல் ஏற்படும் எனக் கூறுகிறார்.

மேலும் பார்க்க: ஜிப்ஸி தயாரிப்பை மீண்டும் கையில் எடுத்தது மாருதி சுசூகி!
First published: June 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்