Home /News /automobile /

வாடிக்கையாளர்களை நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் டாப் 10 கார்கள்!

வாடிக்கையாளர்களை நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் டாப் 10 கார்கள்!

 டாப் 10 கார்கள்

டாப் 10 கார்கள்

மாருதி சுசுகி எர்டிகா மற்றும் டாடா பஞ்ச் போன்ற கார்களும் இந்த பட்டியலில் சிக்கி உள்ளன. தற்போது இந்த இரண்டு கார்களும் ஒவ்வொன்றும் 9 மாதங்கள் வரையிலான காத்திருப்பு காலத்தைக் கொண்டுள்ளன.

செமிகண்டக்டர்களின் உலகளாவிய பற்றாக்குறையின் விளைவாக இந்தியாவில் ஆட்டோமொபைல்களின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டே போகிறது.

குறிப்பிட்ட பற்றாக்குறையின் விளைவாக உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக இந்திய ஆட்டோமொபைல் துறையானது விற்பனையிலும் பெரும் மந்தநிலையை சந்தித்து வருகிறது. அதாவது கார்களை வாங்க யாரும் தயாராக இல்லாமல் அல்லது மக்களிடம் கார்களுக்கான தேவை குறைந்து விட்டதால் அல்ல, மாறாக கார்களின் உற்பத்தி குறைவாக உள்ளதால் போதுமான எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எம்மாதிரியான சிக்கல் உருவாகி உள்ளதென்றால், பற்றாக்குறை காரணமாக சில குறிப்பிட்ட கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அவற்றில் சில 72 வாரங்கள் வரை காத்திருக்க வைக்கின்றன.

எனவே, நீங்கள் இன்றோ, நாளையோ அல்லது எதிர்காலத்தில் ஒரு காரை வாங்கத் திட்டமிட்டால், எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்கிற "வெயிட்டிங் டைமை" அறிந்து வைத்துக் கொள்வது நல்லது; அவ்ளோ நாள் காத்திருக்க முடியாது என்பவர்கள் வேறு கார்களின் மீது கவனத்தை திருப்பலாம்.

ALSO READ |  அட்டகாசமான தள்ளுபடிகளை வழங்கும் ஹோண்டா நிறுவனம்!

மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து சமீபத்தில் அறிமுகமான எக்ஸ்யுவி700 பற்றி முதலில் தொடங்குவோம். இந்த கார் மஹிந்திராவின் வடிவமைப்பு மாடல் மற்றும் கார்களுக்கான ஒட்டுமொத்த அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதால் இது வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் பெரிய அளவிலான ஆர்வத்தை தூண்டியுள்ளது. இருப்பினும் இந்த காரின் சில வகைகளுக்கு இப்போது ஒன்றரை ஆண்டுகள் வரை காத்திருப்பு வேண்டிய அவசியம் உள்ளது, அதாவது குறிப்பிட்ட மாடலை வாங்க நீங்கள் 545 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும்.

பட்டியலின் இரண்டாவது இடத்திலும் மஹிந்திரா நிறுவனத்தின் காரே உள்ளது, அது தார் ஆகும். மஹிந்திரா தாரின் லேட்டஸ்ட் மாடலானது ஒருவழியாக ஆஃப்-ரோட் லைஃப்ஸ்டைல் எஸ்யுவி மற்றும் ஒரு கிரியேச்சர் கம்ஃபோர்ட் பிரெண்ட்லி சிட்டி எஸ்யுவி ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு பொதுவான மாடலாக நின்றுள்ளது. இதனாலேயே இந்த கார் பெரும் வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் குறிப்பிட்ட காரின் சில வகைகளுக்கு காத்திருப்பு காலம் ஒரு வருடமாக அதிகரித்துள்ளது.

ALSO READ |  ஜனவரி 2022 : கார்களின் விலையை ரூ.54,000 வரை உயர்த்திய Kia நிறுவனம்!

பட்டியலில் அடுத்ததாக இருப்பது ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா மாடல் ஆகும். இந்த காரின் மீது நம்பமுடியாத அளவுக்கு 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிப்களின் பற்றாக்குறை இந்தக் காரையும் பாதித்து உள்ளதால், 10 மாதங்கள் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

மாருதி சுசுகி எர்டிகா மற்றும் டாடா பஞ்ச் போன்ற கார்களும் இந்த பட்டியலில் சிக்கி உள்ளன. தற்போது இந்த இரண்டு கார்களும் ஒவ்வொன்றும் 9 மாதங்கள் வரையிலான காத்திருப்பு காலத்தைக் கொண்டுள்ளன. இந்த கார்களை தொடர்ந்து கியா நிறுவனத்தின் சோனெட் மற்றும் செல்டோஸ் மாடல்கள் தலா 6 மாதங்கள் வரையில் காத்திருக்க வைக்கின்றன.

ALSO READ |  ரோல்ஸ்–ராய்ஸ் நிறுவனம் 2021–ம் ஆண்டு கார்கள் விற்பனையில் புதிய சாதனை

நிசானுக்கு மிகவும் தேவையான மாற்றத்தை கொண்டு வந்திருந்தாலும் கூட மேக்னைட் மாடலானது தற்போது 5 மாதங்கள் வரை காத்திருக்கும் காலத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. கடைசியாக, டாடா நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் எம்ஜி நிறுவனத்தின் ஆஸ்டர் போன்ற மாடல்கள் இப்போது ஒவ்வொன்றும் 4 மாதங்கள் காத்திருக்கும் காலத்தை கொண்டுள்ளன.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Automobile, Cars

அடுத்த செய்தி