Home /News /automobile /

10 லட்சத்திற்கும் குறைவான சிறந்த கார்களின் பட்டியல் இதோ..

10 லட்சத்திற்கும் குறைவான சிறந்த கார்களின் பட்டியல் இதோ..

10 லட்சத்துக்கும் குறைவான கார்கள்.

10 லட்சத்துக்கும் குறைவான கார்கள்.

கார் வாங்க விரும்புபவர்களின் ஆசை 10 லட்சத்திற்கும் கீழான விலையில் ஒரு நல்ல காரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதுதான்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக உள்ளது இந்திய கார் சந்தைகள். கார் மீது அதீத ஆர்வம் கொண்ட வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய மாடல்களில் பல கார்கள் சந்தையில் விற்பனையாகிறது. இருந்தபோதும் கார் சந்தையில் பட்ஜெட் ரக கார்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு.

    குறிப்பாக குறைவான விலையில் அதிக செயல்திறனுடன் வரக்கூடிய கார்கள் நிச்சயம் வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் இழுத்துவிடும். இப்படி வாடிக்கையாளர்களின் வசதிக்காக ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சந்தையில் விற்பனையாகும் கார்களின் பட்டியல் என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

    மாருதி சுசிகி சிப்ட் (Maruthi Suzuki swift):

    ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே இந்தியாவில் பிரபலமான கார்களில் ஒன்றாக உள்ளது மாருதி சுசிகி சிப்ட். இதில் மானுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    ஸ்விஃப்ட் டிசைர்.
    ஸ்விஃப்ட் டிசைர்.


    Maruthi Suzuki swift  23.3 முதல் 23.76 கிமீ மைலேஜை வழங்குகிறது. இது ரூபாய் 5.90 லட்சம் மற்றும் ரூ. 8.77 லட்சம் என சந்தையில் விற்பனையாகி வருகிறது.

    டாடா பஞ்ச் (Tata Punch):

    இந்தியாவின் வாகன  விற்பனையில் முன்னணி இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். அதற்கேற்றால் போல் புதிய மாடல்களில் கார்களை விற்பனை செய்கிறது. இதில் இம்பேக்ட் 2.0 டிசைன் லேங்குவேஜ் கீழ் இந்த புதிய பஞ்ச் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

    டாட்டா பஞ்ச்
    டாட்டா பஞ்ச்


    புதிய ALFA-ARC ஆர்கிடெக்சரில் வெளிவரும் முதல் எஸ்.யூ.வி ஆகவும் டாடா பஞ்ச் கார்கள் அமைந்துள்ளது. ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் தோற்றத்தின் பெரும் பங்கை பிரதிபலிக்கும் விதத்தில் உருவாகியுள்ள இந்த கார் 18.82 முதல் 18.92 கிமீ மைலேஜை வழங்குகிறது. இக்காரின் விலை ரூபாய் 5.64 லட்சத்திலிருந்து 8.98 லட்சம் வரை விற்பனையாகிறது.

    டாடா டியாகோ கார் (Tata Tiago):

    டாடா டியாகோ கார் 15 வேரியண்ட்டுகளில் 3 விதமான வண்ணங்களில் சந்தையில் கிடைக்கப் பெறுகிறது. பிஎஸ் 6 வகை 3 சிலிண்டர்களுடன் கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

    காரின் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்குவதோடு 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

    டாட்டா டியாகோ
    டாட்டா டியாகோ


    இதில் 35 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ள நிலையில், 23 கிமீ மைலேஜை உங்களுக்கு வழங்குகிறது. இக்கார் சந்தையில் தற்போது ரூபாய் 5.39 லட்சம் முதல் 7.82 லட்சம் வரை விற்பனையாகிறது.

    மாருதி பலேனோ ( Maruthi baleno)

    மாருதி சுசுகி பலேனோ கார் சந்தையில் ரூபாய் 6.35 லட்சத்தில் விற்பனையாகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூபாய் 9.49 லட்சமாக உள்ளது. இதில் 1.2 லிட்டர் VVT மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மாருது சுஸுகி பாலெனோ.


    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாக உள்ளது. மேலும் 5 ஸ்பீடு AMT யூனிட் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாகவும் மாருதி பலேனாவில் வழங்கப்படுகிறது

    நிஸான் மேக்னைட் (Nissan Magnite):

    புதிய நிஸான் மேக்னைட் suv வின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜை வழங்குகிறது. 40 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

    நிஸான் மேக்னைட்
    நிஸான் மேக்னைட்


    மேலும் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், L வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், பனி விளக்குகள், ஸ்கஃப் பிளேட் ஆகியவை காரின் முகப்பை மேலும் அழகாகக் காட்டுகிறது. இக்கார் தற்போது சந்தையில் ரூபாய் 5.97 லட்சம் முதல் 10.53 லட்சம் வரை விற்பனையாகிறது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Automobile, Cars

    அடுத்த செய்தி