முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ரூ.10 லட்சத்திற்கும் கீழ் விற்பனையாகும் சிறந்த ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் வாகனங்களின் பட்டியல்!

ரூ.10 லட்சத்திற்கும் கீழ் விற்பனையாகும் சிறந்த ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக் வாகனங்களின் பட்டியல்!

கோப்புப்படம்

கோப்புப்படம்

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் பிரீமியம் ஹேட்ச்பேக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :

தற்போது வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து வருவதோடு, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் பிரீமியம் ஹேட்ச்பேக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், ரூ.10 லட்சத்திற்கும் கீழ் விற்பனையாகும் சிறந்த பிராண்ட் வாகனங்களின் விவரங்கள் குறித்து பின்வருமாறு பார்க்கலாம்.

மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா (Maruti Baleno/Toyota Glanza)

மாருதி பலேனோவின் ஆட்டோமேட்டிக் பதிப்புகள் மற்றும் அதன் பேட்ஜ்-வடிவமைக்கப்பட்ட மற்றொரு பிராண்ட் டொயோட்டா கிளான்ஸா ஆகியவை பழைய K12M எஞ்சின் மூலம் இயக்கப்படுகின்றன. இந்த பிரீமியம் ஹேட்ச்பேக்குகள் இரண்டும் CTV கியர்பாக்ஸ் விருப்பத்துடன் வருகின்றன. இவை விசாலமான உட்புறங்களை கொண்டுள்ளன. மேலும் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து பொதுவான அம்சங்களுடன் வருகின்றன.

இதில், மாருதி பலேனோ 1197சிசி 4- சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் விருப்பத்துடன் வருகிறது. இது, 83எச்பி சக்தியில் 113எம்என் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. மேலும் இது 3 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அவற்றில் டெல்டா வேரியண்ட் ரூ.7.77 லட்சத்திற்கும், செட்டா வேரியண்ட் ரூ.8.38 லட்சத்திற்கும், ஆல்பா வேரியண்ட் ரூ.9.10 லட்சத்திற்கும் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) விற்பனை செய்யப்படுகின்றன. இதையடுத்து அதே எஞ்சின் விருப்பங்களை கொண்ட டொயோட்டா கிளான்ஸாவின் ஜி சிவிடி ரூ.8.39 லட்சத்திற்கும், வி சிவிடி ரூ.9.10 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20)

புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் வாகனமான ஹூண்டாய் i20 அதன் பாணி மற்றும் விரிவான அம்சங்களின் பட்டியலைக் கொண்டுள்ளது. புதிய i20 நல்ல சவாரி அனுபவத்தை தருகிறது. மேலும் பவர் ட்ரெயின்கள் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸை ஆகிய விருப்பங்களில் வருகிறது. இதன் சி.வி.டி, டூயல் கிளட்ச் ஆட்டோ மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஏராளமான விருப்பங்களை உங்களுக்கு வழங்குகிறது. இருப்பினும், டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட i20 வாகனங்கள் விலை உயர்ந்தவையாக இருக்கின்றன. இதன் விலை ரூ.10 லட்சம் பட்ஜெட்டை தாண்டி விற்பனையாகின்றன.

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் (Hyundai Grand i10 Nios)

இந்தியாவில் தற்போது ரூ .10 லட்சத்திற்கு கீழ் டீசல் தானியங்கி விருப்பத்துடன் விற்பனைக்கு வரும் ஒரே ஹேட்ச்பேக் நியோஸ் மட்டுமே. ஹூண்டாய் கிராண்ட் i10 வாகனம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு விருப்பங்களில் கிடைக்கிறது. இதன் 1.2 லிட்டர் 1197சிசி, 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் 83 எச்பி திறனுடன் 114என்எம் டார்க் செயல்திறனை வெளியிடுகிறது. அதேபோல, 1186சிசி, 3-சிலிண்டர் டர்போ டீசல் எஞ்சின் 75எச்பி திறனுடன் 190எம்எம் டார்க்கை வெளியிடுகிறது. இரண்டு வகை எஞ்சின்களும் 5-ஸ்பீட் AMT கியர்பாக்ஸ் விருப்பத்துடன் வருகின்றன. இதன் மாக்னா ஏஎம்டி ரூ.6.57 லட்சத்திற்கும், ஸ்போர்ட்ஸ் ஏஎம்டி ரூ,7.18 லட்சத்திற்கும், அஸ்தா ஏஎம்டி ரூ.7.81 லட்சத்திற்கும் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனையாகிறது.

Also read... ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் இந்தியாவின் டாப் 5 மைலேஜ் தரும் பெட்ரோல் கார்கள்!

மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift)

சமீபத்திய புதுப்பித்தலுடன், மாருதி ஸ்விஃப்ட் பழைய 83 ஹெச்பி, 1.2 லிட்டர் கே சீரிஸ் எஞ்சின், மிகவும் சக்திவாய்ந்த மற்றும் திறமையான 1.2 லிட்டர் டூயல்ஜெட் மோட்டாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் ஆட்டோ கியர்பாக்ஸ் ஒரு ஏஎம்டி ஆகும். மேலும் இது வேலையை திறம்படச் செய்கிறது. உண்மையில், ஸ்விஃப்ட் ஏஎம்டி ARAI இன் மதிப்பீடுகளின்படி இந்தியாவில் விற்பனைக்கு வரும் மூன்றாவது மிக மலிவான பெட்ரோல் வாகனமாகும். இவற்றின் நான்கு வேரியண்ட்டுகளில் VXI AMT மாடல் ரூ.6.86 லட்சத்திற்கும், ZXI AMT மாடல் ரூ.7.49 லட்சத்திற்கும், ZXI+AMT மாடல் ரூ. 8.27 லட்சத்திற்கும், ZXI+AMT டூயல் டோன் மாடல் ரூ. 8.41 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

வோக்ஸ்வாகன் போலோ (Volkswagen Polo)

வோக்ஸ்வாகன் போலோ சிறந்த தரம் வாய்ந்த மடல்களாக இருக்கின்றன. இதன் புதிய 1.0-லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் 999சிசி,3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் விருப்பத்துடன் வருகிறது. இது 110எச்பி திறனில் 175என்எம் டார்க்கை வெளியிடுகிறது. மேலும் இது 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸுடன் வருகிறது. இதன் ஹைலைன் பிளஸ் AT மாடல் ரூ. 9.60 லட்சத்திற்கும், GT வேரியண்ட் ரூ.9.99 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Automatic car, Hyundai, Toyota, Toyota Glanza