2020-க்குள் 12 ஆயிரம் பைக்குகள்... உற்பத்தியை இரட்டிப்பாக்க பெனெல்லி முடிவு

அடுத்தகட்டமாக 250 cc மற்றும் 400 cc பைக்குகளை அறிமுகம் செய்யவும் பெனெல்லி தயாராகி வருகிறது.

Web Desk | news18
Updated: August 14, 2019, 9:20 PM IST
2020-க்குள் 12 ஆயிரம் பைக்குகள்... உற்பத்தியை இரட்டிப்பாக்க பெனெல்லி முடிவு
பெனெல்லி
Web Desk | news18
Updated: August 14, 2019, 9:20 PM IST
பெனெல்லி நிறுவன பைக்குகளுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தியாவில் பலமாக தடம் பதிக்க அந்நிறுவனம் தயாராகி வருகிறது.

இத்தாலிய மோட்டார்பைக் நிறுவனமான பெனெல்லி, இந்தியாவுக்கான முதல் தயாரிப்பை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஹைதராபத்தில் உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவியுள்ள பெனெல்லி, வருகிற 2020-ம் ஆண்டுக்குள் உற்பத்தியை 12 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

பெனெல்லி இந்தியாவின் மேலாண்மை நிறுவனமான மஹாவீர் குழுமத்தின் பங்குதாரரான ஆதிஷ்வர் ஆட்டோ ரைட் நிறுவனத்தை நியமித்துள்ளது. 2020-க்குள் 2 லட்சம் ரூபாய் முதல் 6.2 லட்சம் ரூபாய் வரையிலான பைக்குகளைக் களமிறக்க உள்ளது பெனெல்லி இந்தியா. தற்போதைய சூழலில் பெனெல்லியின் ஆறு மாடல்கள் விற்பனையில் உள்ளன.


2020-ன் இறுதியில் 12 அல்லது 13 மாடல்கள் பெனெல்லியில் இருக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்தகட்டமாக 250 cc மற்றும் 400 cc பைக்குகளை அறிமுகம் செய்யவும் பெனெல்லி தயாராகி வருகிறது.

மேலும் பார்க்க: 5 ஆண்டுகளுக்கான வாரண்டியுடன் இந்தியாவுக்குக் களமிறக்கப்பட்ட பெனெல்லி லியான்சினோ 500..!
First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...