ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

தீபாவளிக்கு வருகிறது பெனெல்லி Imperiale 400... தொடங்கியது முன்பதிவு...!

தீபாவளிக்கு வருகிறது பெனெல்லி Imperiale 400... தொடங்கியது முன்பதிவு...!

Imperiale-400

Imperiale-400

பெனெல்லியின் முதல் ரெட்ரோ ஸ்டைல் பைக் ஆக Imperiale 400 உள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பெனெல்லி Imperiale 400 பைக் வருகிற தீபாவளி பண்டிகையின் போது விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து பெனெல்லி டீலர்ஷிப்களிலும் பெனெல்லி Imperiale 400 பைக் விற்பனை நடைபெறும். வாடிக்கையாளர்கள் 4ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கான எல்லையில்லா கிலோமீட்டர் வாரன்டி உடன் Imperiale 400 உள்ளது. சிவப்பு, கருப்பு மற்றும் க்ரோம் ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. 373.5cc ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட Imperiale 400 19bhp திறனுடன் 28Nm டார்க் வெளியீடு கொண்டதாக உள்ளது. என்ஜின் 5 ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் கொண்டதாக உள்ளது.

பெனெல்லியின் முதல் ரெட்ரோ ஸ்டைல் பைக் ஆக Imperiale 400 உள்ளது. 1950-ம் ஆண்டு காலகட்டத்தில் வெளியான பெனெல்லி MotoBi-யின் வடிவமைப்பை ஒற்றியே இப்புதிய Imperiale 400 பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் உள்ளது போன்றே சீட் வடிவமைப்பு காணப்படுகிறது. ரெட்ரோ தீம் என்றாலும் இன்றைய நவீன் ஸ்டைலும் பின்பற்றப்பட்டுள்ளது.

இன்னும் பைக்கின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தியாவில் விலை தோராயமாக 2.5 லட்சம் ரூபாய் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: ஓராண்டில் 6 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டம் - ஜாகுவார் அறிவிப்பு

தொழிலாளர் நல வாரிய நிதி, சில ஆண்டுகளில் பற்றாக்குறையாகும் நிலை

First published:

Tags: Bike