ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

பயன்படுத்திய பைக்குகளை வாங்கும் மோகம் அதிகரிப்பு.. பீப்கார்ட்டில் குவியும் கூட்டம்.. ஒரே ஆண்டில் அசுர வளர்ச்சி!

பயன்படுத்திய பைக்குகளை வாங்கும் மோகம் அதிகரிப்பு.. பீப்கார்ட்டில் குவியும் கூட்டம்.. ஒரே ஆண்டில் அசுர வளர்ச்சி!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இதோடு ஆன்லைனில் பழைய கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை பீப்கார்டு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு பேருந்துகளில் பயணம் செய்கிறார்களோ? இல்லையோ? டூவிலர்களைத் தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளைப் பள்ளி அனுப்புவது முதல் பணிக்கு செல்வது என அனைத்திற்கும் டூவிலர்களைப் பயன்படுத்துகின்றனர் பெரும்பாலான மக்கள். அதே சமயம் அதிகரித்துவரும் விலை உயர்வால் அனைவராலும் புதிய கார்கள் அல்லது டூவிலர்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பட்ஜெட் வாங்க நினைப்பவர்கள் மற்றும் முதல் முறையாக இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களை வாங்கி ஓட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரிடம் பயன்படுத்திய பழைய கார் அல்லது டூவிலர்களைத் தான் வாங்க நினைக்கிறார்கள்.

இதுப்போன்ற மக்களுக்காகவே கடந்த 2021 ஆம் ஆண்டு பெங்களுருவைத் தலைமையிடமாக் கொண்டு ஸ்டெல்லாரிஸ் மற்றும் சிராடே வென்ச்சர்ஸ் ஆகியோர் பீப்கார்ட் என்ற ஆன்லைன் வணிக தளம் ஒன்றை ஆரம்பித்தனர். பீப்கார்ட் நிறுவனத்தின் மூலம் பயன்படுத்த இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்குமான வசதிகள் உள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற பயன்படுத்திய வாகனங்களை விற்பனை செய்து வரும் பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் கடந்த நிதியாண்டில் 9 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளது என்று அறிக்கையில் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேப் போன்று புதிய கார் விற்பனையை விட பயன்படுத்திய கார்களின் விற்பனை இரண்டு மடங்கு அதிகமாக இருந்தாலும், 24 கோடி வாகனங்கள் சாலையில் சென்றாலும், பயன்படுத்திய வாகன சந்தையின் சதவீதம் குறைவு என்றே கூறலாம். இதோடு தொழில்துறை அறிக்கையின் படி, பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சந்தையில் 10 பில்லியன் டாலர்கள் என்றிருந்தாலும் நம்பிக்கை, வசதி மற்றும் பணத்திற்கான மதிப்பு போன்றவற்றைக் கணக்கிடும் போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Read More : தீபாவளியை முன்னிட்டு சலுகைகளை அள்ளி வழங்கும் ஓலா ஸ்கூட்டர்

 குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 2021 ஆம் நிதியாண்டில் மட்டும் 35 லட்சம் பழைய கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்குள் இதன் எண்ணிக்கை 70 லட்சமாக உயரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு புதிய கார்களின் விற்பனை சந்தையைப் போலவே பழைய கார்களின் விற்பனை சந்தையின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பழைய கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதோடு ஆன்லைனில் பழைய கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை பீப்கார்டு போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த செயல்பாடுகள் மற்றும் காரின் பதிவுகளை எளிதாக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே பயன்படுத்தப்பட்ட கார்களை வாடிக்கையாளர்கள் வாங்கினாலும் இனி எந்தகவலையும் இன்றி உபயோகிக்கலாம் எனவும் வருங்காலங்களில் பயன்படுத்திய குறிப்பாக ஒருவரை மட்டுமே பயன்படுத்தி கார்கள் அல்லது இரு சக்கர வாகனங்களை வாங்கும் நிலை அதிகரிக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Automobile, Bike, Car