ஜனவரி 15 முதல் ISI முத்திரை இல்லாத ஹெல்மட்களுக்குத் தடை!

ISI முத்திரை இல்லாத ஹெல்மெட் விற்றால் 2 லட்சம் ரூபாய் அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: December 28, 2018, 10:44 AM IST
ஜனவரி 15 முதல் ISI முத்திரை இல்லாத ஹெல்மட்களுக்குத் தடை!
helmet (Representative image)
Web Desk | news18
Updated: December 28, 2018, 10:44 AM IST
ISI முத்திரை இல்லாத ஹெல்மட்களை உற்பத்தி செய்ய, விற்க மற்றும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தத் தடை வருகிற ஜனவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ’இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கானப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ISI முத்திரை இல்லாத ஹெல்மட்டுகளை உற்பத்தி, விற்பனை, பயன்பாடு என அனைத்து விதத்திலும் தடை விதிக்கப்படுகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.

ISI தரச் சான்றிதழ் முத்திரை இல்லாத ஹெல்மட்டுகளை விற்பனை செய்தால் 2 லட்சம் ரூபாய் அபராதத்துடன் 2ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ISI முத்திரை இல்லாத ஒரு ஹெல்மெட் 75- 150 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. ஆனால், ISI முத்திரை உள்ள ஒரு ஹெல்மெட் 800- 3 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை ஆகி வருகிறது.

மேலும், ஜனவரி 15 முதல் அமலாகும் புதிய உத்தரவில், ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் ஒரு ஹெல்மட்டுக்கான அதிகப்பட்ச எடையை 1.5 கிலோவில் இருந்து 1.2 கிலோ ஆகக் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடை உத்தரவு அமலானதிலிருந்து கூடுதலாக இரண்டு மாத காலத்துக்குக் கருணைக் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அந்த 2 மாத காலத்துள் ISI முத்திரை உடன் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்றும் ISI முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளை விற்பனையாளர்களும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: கூட்டணிக்காக அதிமுகவை மிரட்டுகிறாரா மோடி?
First published: December 28, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...