புதிய 5-5-5 ஆஃபர்- பஜாஜ் பைக்குகள் வாங்குபவர்களுக்கு 5 அற்புத சலுகைகள்

Saravana Siddharth | news18
Updated: October 6, 2018, 8:27 PM IST
புதிய 5-5-5 ஆஃபர்-  பஜாஜ் பைக்குகள் வாங்குபவர்களுக்கு 5 அற்புத சலுகைகள்
பஜாஜ் பல்சர் என் எஸ் 200.
Saravana Siddharth | news18
Updated: October 6, 2018, 8:27 PM IST
பஜாஜ் ஆட்டோமொபைல் நிறுவனம் 5-5-5 என்ற புதிய ஆஃபரை அறிவித்துள்ளது.

அக்டோபர் 5- தேதி முதல் வாங்கப்படும் குறிப்பிட்ட பஜாஜ் நிறுவன பைக்குகளுக்கு 5 வருட இலவச டேமேஜ் காப்பீடு, 5 இலவச சர்வீஸ் மற்றும் 5 வருட இலவச வாரண்டியையும் பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் நிறுவனம், புதிய சலுகை ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த சலுகைக்கு 5-5-5 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பிளாட்டினா, டிஸ்கவர், பல்சர் 150, பல்சர் என்எஸ் 160 அல்லது வி ரேஞ் பஜாஜ் பைக்குகளை வாங்குபவர்களுக்கு 5 வருட இலவச டேமேஜ் காப்பீடு சலுகையை வாடிக்கையாளர்கள் பெறமுடியும். மேலும் சிடி100. பிளாட்டினா, டிஸ்கவர், வி மற்றும் பல்சர் பைக்குகள் வாங்குபவர்கள் இரண்டு இலவச இலவச செர்வீசுகள் சலுகையாக பெறமுடியும்.


இதுமட்டுமல்லாமல் பஜாஜ் நிறுவனத்தின் எந்த பைக்குகளை வாங்கினாலும் அதற்கு 5 வருட இலவச வாரண்டியும் வழங்கப்படுகிறது. மேலும் பல்சர் பைக்குகள் ₹6,500 ரூபாய், பஜாஜ் வி பைக் ₹5,200 ரூபாய், டிஸ்கவ்சர் ₹4,800 ரூபாய், பிளாட்டினா ₹4,100 ரூபாய் சலுகை விலைகளில் கிடைக்கும். இந்த சலுகை அக்டோபர் 5-ம் தேதியிலிருந்து பஜாஜ் பைக் வாங்குபவர்களுக்கு மட்டுமே செல்லும்.
First published: October 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...