மலை போல குவிந்த ஆர்டர்கள்: பஜாஜ் செடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவுகள் மீண்டும் நிறுத்தம்!

பஜாஜ் செடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

அர்பன் மற்றும் பிரிமியம் என இரண்டு வேரியண்ட்களில் பஜாஜ் செடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கிடைக்கிறது.

  • Share this:
ஆர்டர்கள் குவிந்துள்ளதால் செடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புக்கிங்குகளை மீண்டும் நிறுத்துவதாக பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது.

முகலாய படையெடுப்பை எதிர்த்து போராடிய ராஜஸ்தான் மன்னர் மஹரன பிரதாப்பின் குதிரையின் பெயர் தான் செடக். பஜாஜ் நிறுவவம் தனது ஸ்கூட்டர் மாடலுக்கு செடக் என பெயரிட்டது. 1972ம் ஆண்டு முதல் 2006 வரை பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர் மாடலாக திகழ்ந்தது ‘செடக்’. அதன் பின்னர் புதிய ஸ்கூட்டர்களின் வரவால் செடக் ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு குறைந்ததையடுத்து செடக் ஸ்கூட்டர்களின் விற்பனை நிறுத்தப்பட்டது.

தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் யுகமாக மாறிவிட்டதால் பஜாஜ் நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தயாரிப்பை துவங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் பிரபலமான செடக் ஸ்கூட்டர்களை எலக்ட்ரிக் அவதாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக சக்திவாய்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக பஜாஜ் செடக் விளங்குகிறது. கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக உற்பத்தியை நிறுத்தும் சூழலுக்கு பஜாஜ் நிறுவனம் தள்ளப்பட்டது. கடந்த செப்டம்பரில் புக்கிங்குகளை நிறுத்துவதாக பஜாஜ் அறிவித்தது.

ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் இந்தியாவின் டாப் 5 மைலேஜ் தரும் பெட்ரோல் கார்கள்!


இதனிடையே தற்போது மீண்டும் பொருளாதார சூழல் பழைய நிலைக்கு திரும்பியிருப்பதால் மீண்டும் நேற்று முதல் செடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் புக்கிங்குகளை தொடங்கியதாக பஜாஜ் அறிவித்தது. இருப்பினும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அதிகபட்சமான புக்கிங்குகள் கிடைத்திருப்பதால் கிடைத்த புக்கிங்குகளை முதலில் டெலிவரி செய்யும் வகையில் புக்கிங்குகள் நிறுத்தப்பட்டிருப்பதாக பஜாஜ் அறிவித்துள்ளது. தற்போது புனே மற்றும் பெங்களூருவில் பஜாஜ் தனது செடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சந்தைப்படுத்தி உள்ளது, அடுத்த காலாண்டிற்குள் மீண்டும் புக்கிங்குகளை தொடங்குவதுடன் வேறு சில நகரங்களிலும் தனது விற்பனையை விஸ்தரிக்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்.ஜி, டாடா பவர் கூட்டணி சார்பில் சென்னையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்!


அர்பன் மற்றும் பிரிமியம் என இரண்டு வேரியண்ட்களில் பஜாஜ் செடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கிடைக்கிறது. அர்பன் வேரியண்ட் 1.15 லட்ச ரூபாய்க்கும், பிரீமியன் வேரியண்ட் 1.20 லட்ச ரூபாய்க்கும் கிடைக்கிறது. ஏதெர் எனர்ஜி நிறுவனத்திற்கு போட்டியளிக்கும் வகையில் பஜாஜ் எலக்ட்ரிக் நிறுவனம் வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Published by:Arun
First published: